உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் பதவிக்கு முட்டி மோதும் ஹாவேரி காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

அமைச்சர் பதவிக்கு முட்டி மோதும் ஹாவேரி காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

ஹாவேரி: 'அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்று முதல்வர் சித்தராமையா கூறி இருக்கும் நிலையிலும், ஹாவேரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடையில் அமைச்சர் பதவிக்கு போட்டி எழுந்து உள்ளது.ஹாவேரி மாவட்டத்தில் ஹாவேரி, ஹனகல், பேடகி, ஷிகாவி, ஹிரேகெரூர், ராணி பெண்ணுார் என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த நான்கு சட்டசபை தேர்தலிலும் ஷிகாவி தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி அடைந்தது. மற்ற ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பா.ஜ., மாறி மாறி வெற்றி பெற்றன.கடந்த நடந்த சட்டசபை தேர்தலில் ஷிகாவி தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனாலும், ஹாவேரி மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஷிகாவி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம், ஹாவேரி மாவட்டம் முழுதும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் தங்கள் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று ஹாவேரி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் கேட்க ஆரம்பித்து உள்ளனர்.ஷிகாவி எம்.எல்.ஏ., யாசிர் அகமது கான் பதானை தவிர மற்ற ஐந்து பேருக்கும் அமைச்சராகும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதில் துணை சபாநாயகராக உள்ள ருத்ரப்பாலமானியும் ஒருவர்.கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்று முதல்வரே தெளிவுபடுத்தினார். ஆனாலும் ஹாவேரி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் இடையில் அமைச்சர் பதவிக்கு போட்டி எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ