உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனநோய் பாதிப்பு அதிகரிப்பு சுகாதார துறை அதிர்ச்சி தகவல்

மனநோய் பாதிப்பு அதிகரிப்பு சுகாதார துறை அதிர்ச்சி தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளில் 47.89 லட்சம் பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில சுகாதாரத்துறை, சிகிச்சை அளிக்கிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில், மன நோய்க்கு சிகிச்சை கிடைக்கிறது.தாலுகா மருத்துவமனைகளில், 'மனோ சைதன்யா' திட்டத்தின் கீழ், செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சிறப்பு மனநல வல்லுனர் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். அதேபோல, 'க்ஷேமா' உட்பட பல்வேறு திட்டங்களின் கீழும், மன நோயாளிகளுக்கு சுகாதாரத்துறை சிகிச்சை அளிக்கிறது.மாநிலத்தில் மன நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளில், 47.89 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மன அழுத்தத்துக்கு ஆளானவர்களில் இளம் தலை முறையினரே அதிகம். வேலை கிடைக்காதது, குறுகிய காலத்தில் பெரிய அளவில் சாதனை செய்ய வேண்டும் என்ற அவசரம், மொபைல் போன் உட்பட, டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவது, குடும்ப பிரச்னை, தனிமை, பணி இடத்தில் மன அழுத்தம் என, பல்வேறு காரணங்களால் மனநோயால் பாதிப்படைகின்றனர்.நிமான்ஸ் மருத்துவமனை தெரிவித்த தகவலின் படி, தற்கொலை செய்து கொண்டவர்களில், மூன்றில் ஒரு பங்கு நபர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள். மன நல பாதிப்பு மிகவும் கடுமையான பிரச்னையாகும். இந்த பிரச்னைக்கு உள்ளானவர்கள் பயம், துாக்கமின்மை, கெட்ட கனவுகள், பாதுகாப்பற்ற உணர்வு, வேலையில் ஆர்வம் இல்லாமை போன்றவை, மன நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ