உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் கைகளில் சுகாதாரத்துறை: ராகுல் குற்றச்சாட்டு

தனியார் கைகளில் சுகாதாரத்துறை: ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ''சுகாதாரத்துறை வேண்டும் என்றே தனியார் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பணக்காரர்களுக்கு மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகளின் உயிரை அரசு மருத்துவமனைகளால் பாதுகாக்க முடியவில்லை,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை எலி கடித்துள்ளது. இதனால், காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது விபத்து கிடையாது. இது கொடூர கொலை. இச்சம்பவம் கொடூரமானது. மனிதநேயமற்றது. இதைப்பற்றி கேட்டாலே நடுக்கம் ஏற்படுகிறது. அரசு தனது கடமையை நிறைவேற்ற தவறியதால், தாயின் மடியில் இருந்து குழந்தை வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை வேண்டும் என்றே தனியார் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பணக்காரர்கள் மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகளின் உயிரை அரசு மருத்துவமனைகளால் பாதுகாக்க முடியவில்லை. மாறாக மரணக்குகைகளாக மாறிவிட்டன.விசாரணை நடத்துவோம் என நிர்வாகம் எப்போதும்போல் சொல்கிறது. ஆனால், புதிதாக பிறக்கும் குழந்தை பாதுகாப்பை எப்போது உறுதி செய்வீர்கள், அரசை நடத்திச் செல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பததே தற்போது முக்கியமான கேள்வி?பிரதமர் மோடியும், மபி முதல்வரும் தலை குனிய வேண்டும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழை மக்களின் சுகாதார உரிமையை உங்கள் அரசு பறித்துவிட்டது. இப்போது குழந்தைகள் தாய்மார்களின் மடியில் இருந்தும் பறிக்கப்படுகிறார்கள். அரசின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெற்றோர்களின் குரலாக இதனை பேசுகிறேன். இதற்கு பிரதமர் மோடியின் பதில் என்ன?நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். ஒவ்வொரு ஏழை மக்கள், குடும்பம், குழந்தைகளுக்காக இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
செப் 04, 2025 22:35

உங்க கையில் கொடுத்தால் எல்லாம் சரியாகிடுமா.அதில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவையும் சுருட்டிக்கொண்டு இனி சீன செல்லமுடியாது அமெரிக்கன் நம்பிகாலம் தள்ளவேண்டிய நிலை அங்கு ஓடிவிடுவீங்க. இயற்கைக்கு மாறான எதிர் மறை எண்ணம் கொண்டவர். மற்ற நாடுகள்போல் சொந்த நாட்டையே காட்டி கொடுப்பவரின் கையையும் காலையும் கட் பண்ணிட்டால் உமது பிரச்னைஅடங்கி விடும்.அதை பார்த்து பல பேர் கவுண்டமணி செந்தில் காமெடி போல் சொம்பும் கையுமாய் ஓடிக் கொண்டிருக்கும்.அது போல் இங்கும் தொங்கி கொண்டிருக்கும் ஒரு அங்கம் துடி துடித்து அடங்கி சுருண்டுவிடும்.


Bvanandan
செப் 04, 2025 21:25

Classic Idiot is this Raghul


VENKATASUBRAMANIAN
செப் 04, 2025 18:47

அனைத்து மருத்துவமனை கல்லூரிகளை தனியாருக்கு கொடுத்து விட்டு இப்படி பேச வெட்கமாக இல்லையா


பாரத புதல்வன்
செப் 04, 2025 18:11

இதை விட டிரம்ப் க்கு ஆலோசகராக சேரும் அனைத்து தகுதியும் உமக்கு உள்ளது பப்புகான்....


kalyanasundaram
செப் 04, 2025 15:53

blaberring


முக்கிய வீடியோ