உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு முண்டகை பகுதியில் பெய்து வரும் கனமழையால் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி பெய்த பெருமழை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கியது.நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ad8ouon&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒட்டுமொத்த நாடும், கேரளாவில் நிகழ்ந்த துயரத்தால் கடும் துயரம் அடைந்தது. இந்நிலையில் வயநாடு முண்டக்கை பகுதியில் பெய்து வரும் கனமழையால் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.புன்னம்புழா ஆற்றில் நீர் மட்டம் மழையின் எதிரொலியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தான் கடந்தாண்டு நிலச்சரிவின் போது பெய்லி பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் நிலச்சரிவு ஏற்படும் என்பதற்கான அதிகாப்பூர்வ அறிவிப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட இல்லை. இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் வயநாடு, முண்டக்கை பகுதியில் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மழை பெய்யும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tiruchanur
ஜூன் 25, 2025 16:06

அங்க நிறைய அமைதி மார்க்க மக்கள் தானே இருக்காங்க. அவங்க ..ல்லா காப்பாத்துவாரு


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 25, 2025 15:32

தற்பொழுது வயநாடு காங்கிரஸ் பிரதிநிதி அதாவது எம்.பி ராகுல் காந்தி அல்ல, பிரியங்கா காந்தி


baskkaran Kg
ஜூன் 25, 2025 14:12

whwere is you past & present MP,they willnot come to u for any support/rescure


ராமகிருஷ்ணன்
ஜூன் 25, 2025 13:50

பப்புவுக்கும் பப்பிக்கும் வேலை வந்து விட்டது, அடுத்த தடவை ஏதாவது பாலைவனத்தில் நிக்க வேண்டும். இந்த இம்சை இருக்காது


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:52

மீண்டும் வந்தது வயநாடு காங்கிரஸ் பிரதிநிதி ராகுலுக்கு பிரச்சினை.


சமீபத்திய செய்தி