உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலில் வரலாறு காணாத பனிப்பொழிவு; 700 சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு

ஹிமாச்சலில் வரலாறு காணாத பனிப்பொழிவு; 700 சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மணாலி: ஹிமாச்சல பிரதேசத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 700 சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது. எங்கு பார்த்தாலும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. அடர் பனிப்பொழிவால் ரோஹ்டாங் சோலாங், அடல் சுரங்கப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின. அதில் இருந்த 700க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். எங்கும் நகரமுடியாத அளவுக்கு வாகனங்கள் சிக்கிக் கொள்ள, போலீசார் அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் இறங்கினர். உள்ளூர் மக்களும் போலீசாருக்கு உதவி செய்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் குவிந்துள்ளனர். சிம்லா, மணாலி உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 24, 2024 10:44

இது அயல்நாட்டு சதி, அமெரிக்கா டீப் ஸ்டேட் சதின்னு சோரோஸ்தான் காரணம்னு சொல்லுட்டா தீர்ந்தது பிரச்சனை.


veeramani
டிச 24, 2024 09:44

மய்ய அரசில் பணிசெய்த முத்த விஞ்ஞானியின் கருத்து.. காலநிலை பருவநிலை மாற்றங்கள் நடந்துகொண்டுள்ளன . சில தினங்களுக்கு முன்னர் தென் தமிழ்நாடு பூமத்தியரேகை பகுதி போல பகலில் நல்ல வெய்யில் இரவில் கடுமையான ம ழை பெய்தது இந்த வாரத்தில் வடக்கு மாநிலங்களில் கடுமையான பனி பொலிவு உண்டாகியுள்ளது வெப்பநிலை சைபெரியா போல் மைனஸ் டிகிரியில் உள்ளது.. இந்த பருவநிலை மாற்றங்களை அத்ரி அவதானிப்பதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம். எனவே மக்கள் தமது குடும்பத்தினருடன் தெரிந்த ஊர்களுக்கும் செல்லலாம்


Kasimani Baskaran
டிச 24, 2024 07:49

கலிகாலத்தில் காலநிலை மாறும் என்று சொல்லப்பட்டது இதுதான் போல.


முக்கிய வீடியோ