உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்டில் கேதார்நாத் தாமில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில், விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3jk1xco8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் தாமில் இருந்து குப்தகாஷிக்கு சென்று கொண்டிருநு்த ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் காடுகளில் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். கேதார்நாத் தாமில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குப்தாஷிக்கு ஹெலிகாப்டர் திரும்பி கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். மீட்புபடையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

முதல்வர் வருத்தம்

இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ரத்து இந்நிலையில், சர்தாம் யாத்திரை மேற்கொள்ள ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு விமானிகளின் லைசென்ஸ், ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Brahamanapalle murthy
ஜூன் 15, 2025 16:50

these private operators are not being controlled. they do not properly maintain the helicopter condition and their greed for quick money to make within the season is the main reason for such accidents. the fleet operators to be put behind bars


Ramesh Sargam
ஜூன் 15, 2025 12:07

இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்ய தகுந்த நேரம் இல்லை. விமானத்தில் பயணம் செய்வதை மக்கள் சிறிதுகாலம் தவிர்க்க வேண்டும். இந்திய வீதிகளிலும் தினம் தினம் விபத்து, தினம் தினம் உயிர்பலி. ஆகையால் வீட்டைவிட்டு வெளியே செல்வதையே மக்கள் சிறிது காலம் தவிர்க்கவேண்டும்.


Sudha
ஜூன் 15, 2025 10:55

ஹெலிகாப்டர் விபத்துகளுக்கு வானிலை மட்டும் காரணமா? அப்படியானால் அதற்கு கட்டுப்பாட்டு விதிகள் வேண்டாமா? இதுவரை ஆயிரம் ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்திருக்கும். விமான அமைச்சகத்தின் எல்லாவற்றையும் ஆராய வேண்டும். முக்கியமாக கார்கே ராகுல் போன்ற தீவிர தேசபக்தர்கள் இவற்றை விவாதித்து விட்டு பிறகு வெளிநடப்பு செய்யலாம். ஸ்டாலினுக்கு இது தெரியாத விஷயம். அடுத்த கச்சத்தீவு கூப்பாடு எப்போது?


Thravisham
ஜூன் 15, 2025 09:54

வெயில்/சீரான சீதோஷணை காலங்களில் மட்டுமே சார் தாம் யாத்திரை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்வது உசிதமானது


krishnamurthy
ஜூன் 15, 2025 08:59

வேதனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை