உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்

ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் கூறியதாவது: உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. உயர் நீதிமன்றங்கள் பாதி அளவு எண்ணிக்கையிலான நீதிபதிகளை வைத்து செயல்படும் போது, அவர்களிடம் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும். உங்கள் வழக்கை விட பழைய வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றத்திலேயே மனு அளியுங்கள். ஏற்கனவே மனு அளித்திருந்தால் மீண்டும் வழங்குங்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். வழக்கு விசாரணையின் போது நீதிபதி விக்ரம் நாத் கூறுகையில், 'நான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது, வழக்கை பட்டியலிடவே போராட வேண்டும். நூற்றுக்கணக்கான மனு அளிக்க வேண்டும். அதற்கே பல ஆண்டுகள் ஆகும்' என்றார். மத்திய சட்ட அமைச்சக புள்ளிவிவரப்படி, நாட்டில் உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,122. ஆனால் 792 நீதிபதிகளுடன் மட்டுமே உயர் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. 330 இடங்கள் காலியாக உள்ளன. இது செப்டம்பர் 1ம் தேதி வரையிலான நிலவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

சிந்தனை
செப் 24, 2025 16:59

இங்கே நீதியை சொல்ல நீதிமன்றமும் இல்லை நீதிபதிகளும் இல்லை எல்லோரும் சட்டத்தின்படி தான் தீர்ப்பு அளிக்க முடியும் அதனால் கோர்ட் ஜட்ஜ் என்பதே போதுமான வார்த்தைகள் அனாவசியமாக மீண்டும் மீண்டும் நீதிமன்றம் நீதிபதி என்று சொல்லி ஏமாற்றவும் வேண்டாம் அந்த தவறை செய்யாதீர்கள் அல்லது சரியாக மொழி பெயருங்கள் முழியைப் பெயர்காதீர்கள்


ram
செப் 24, 2025 12:03

இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஹிந்து மக்களுக்கு எதிராக இருக்கிறதே என்று பார்த்தால் இப்போது உச்சநீதிமன்ற தலைமை நபர் கூட ஹிந்துக்களுக்கு எதிராக இருக்கிறார். இதற்கு ஒரே வழி colligium முறையை ஒழிந்தால் போதும்.


Rathna
செப் 24, 2025 11:46

1. நீதி மன்றங்களை விரைவு மன்றகளாக மாற்றுங்கள். 2. டிஜிட்டல் சாட்சி உள்ள வழக்குகளில் 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குங்கள். 3. ஆங்கிலேயன் கொடுத்த கோடை வருட விடுமுறையை 45 நாட்கள் நீக்குங்கள். 4. வாய்தா எண்ணிக்கையை மொத்தம் 5 ஆகா குறையுங்கள் 5. பெட்டிஷனில் இருந்து தீர்ப்பு அனைத்தையும் கம்ப்யூட்டரில் கொண்டு வாருங்கள். 6. நீதி துறை மேலான லஞ்ச வழக்குகளை விசாரிக்க தீர்ப்பாயம் கொண்டு வாருங்கள்.


lana
செப் 24, 2025 11:34

உயர் நீதிமன்றம் ஐ நாங்கள் கட்டுப்படுத்தினால் எங்கள் வண்டவாளம் எல்லாம் அவர்கள் மூலம் தண்டவாளத்தில் ஏறிவிடும் . அதுனால ஒரு இருவருக்கும் ஒரு setup


Keshavan.J
செப் 24, 2025 11:11

நீங்களே யார் கட்டுபாட்டிலும் இல்லை. எல்லாம் எங்கள் தலை எழுத்து


Madras Madra
செப் 24, 2025 10:43

இதற்க்கு ஒரு நீதி யார் வழங்குவார் யுவுர் ஹானர் மத்திய அரசு சீர் திருத்த சட்டத்தை யும் ஏற்க மாட்டேன் என்பீர்கள்


Abdul Rahim
செப் 24, 2025 10:43

ஐகோர்ட்டுகள் உங்கள் கட்டுப்பாட்டில் வராது என்றால் அவர்களின் உத்தரவிற்கு நீங்கள் எப்படி தடை விதிக்கமுடியும் மற்றும் அவர்களின் தீர்ப்பு சரியே என எப்படி உறுதி செய்யமுடியும் முன்னுக்கு பின் முரணானதாக நீதித்துறை மாறிவிட்டது காலத்தின் கொடுமை ....


Ravi Kumar
செப் 24, 2025 10:28

நீதிபதிகள் பற்றா குறை, குறையுங்கள் பற்றாக்குறையை , நீதி பற்றுடன் பனி புரியுங்கள் ,தாமதங்களால் நீதி மன்றத்தின் மதிப்பு, மரியாதை, குறைத்துவிடும் . கால தேவன் விழிப்புடன் இருக்கிறான் , எவரும் தப்ப முடியாது , இது வாயில் காப்பவன் முதல் தலைமை வரை ...


Sun
செப் 24, 2025 10:01

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் காலிப் பணியிடம் பெருகி உள்ளது. நான்கு பேர் வேலையை ஒரு ஆள் செய்கிறார். அவர்களுக்கு நீதியரசர்கள் உத்தரவிடவில்லையா? இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் மூன்று வாரத்திற்குள் முடிக்க வேண்டுமென? உங்களுக்கு வந்தா ரத்தம்? மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா? உச்ச நீதி மன்றம் உயர் நீதி மன்றத்திற்கு உத்தரவிட முடியாதாம். ஆனா ஜனாதிபதிக்கு உத்தரவிடுவார்களாம்? என்ன சார் நியாயம் இது?


அப்பாவி
செப் 24, 2025 08:55

ரொம்ப நல்லது. இனிமேலாட்டும் ஐக்கோர்ட் தீர்ப்புகளை ரத்து பண்ணாம தலையிடாம உங்க வேலையை மட்டும்.பாருங்க.


duruvasar
செப் 24, 2025 18:10

செம்மண் செம்மலை உள்ளே தள்ளாமல் வுடமாடீங்களோ . நீங்க எந்த அணி ?


புதிய வீடியோ