வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இங்கே நடப்பது அங்கேயும்
பெங்களூரு ; அமைச்சர் ஜமீர் அகமதுகான் மதம் குறித்து விமர்சித்த, ஹிந்து அமைப்பின் புனித் கெரேஹள்ளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.கர்நாடக வீட்டுவசதி அமைச்சர் ஜமீர் அகமதுகான். சமீபத்தில் சென்னப்பட்டணாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய அமைச்சர் குமாரசாமியை 'கருப்பர்' என்று விமர்சித்தார். இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் ஹிந்து அமைப்பின் புனித் கெரேஹள்ளி தனது முகநுால் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு, ஜமீர் அகமதுகானுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவரது மதம் குறித்தும் விமர்சித்தார்.இதுகுறித்து அமைச்சரின் ஆதரவாளர் அளித்த புகாரின்படி, நேற்று முன்தினம் இரவு புனித் கெரேஹள்ளியை சாம்ராஜ்பேட் போலீசார் கைது செய்தனர். நேற்று காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட, ஆட்டு இறைச்சியை, நாய் இறைச்சி என்று கூறி, புனித் கெரேஹள்ளி பிரச்னை ஏற்படுத்தி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.விஜயநகர் ஏ.சி.பி., சந்தன்குமார் விசாரணையின் போது தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக, புனித் கெரேஹள்ளி குற்றச்சாட்டு கூறி இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
இங்கே நடப்பது அங்கேயும்