வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன ஆவணங்களை அழிப்பதற்காக மின்கசிவு ஏற்பட்டதோ ????
பணம் ஒன்றே குறி என்று அலையும் மருத்துவமனை , பாதுகாப்பில் கோட்டை விட்டது என்பது எதிர்பார்த்தது தான்
சதாசிவ நகர்: பெங்களூரில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை.பெங்களூரு சதாசிவநகரில் எம்.எஸ்.ராமையா என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் இதயம் தொடர்பான நோய்க்கு, சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளது. நேற்று மதியம் 1:25 மணிக்கு, மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த மாடியில் இருந்த, நோயாளிகள் அலறி அடித்து இரண்டாவது தளத்திற்கு சென்றனர்.தீ விபத்து பற்றி, தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. 'ஏசி'யில் ஏற்பட்ட, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.சதாசிவநகர் போலீசார், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
என்ன ஆவணங்களை அழிப்பதற்காக மின்கசிவு ஏற்பட்டதோ ????
பணம் ஒன்றே குறி என்று அலையும் மருத்துவமனை , பாதுகாப்பில் கோட்டை விட்டது என்பது எதிர்பார்த்தது தான்