உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை வெற்றி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை வெற்றி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

புதுடில்லி: ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lpsjgyaa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது பணிகள் அனைத்து நிறைவடைந்து உள்ளன. பழைய ரயில் இன்ஜின்கள் நீக்கப்பட்டு புதிய ஹைட்ரஜன் ரயில் இன்ஜின்கள் பல வழித்தடங்கள் அறிமுகம் ஆக உள்ளது. இந்நிலையில், சென்னை, ஐ.சி.எப்.,யில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும். ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும்'' என்றார்.

சிறப்பம்சங்கள் என்ன?

* ஹைட்ரஜன் ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது.* அனல் மின் நிலையங்களில், மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதில் அந்த பிரச்னை இல்லை.* ஹைட்ரஜன் ரயில் அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ., துாரம் வழித்தடம் வரை மட்டுமே இயக்கப்படும்.* இந்த ரயிலில் கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, தானியங்கி கதவுகள் இருக்கும். 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். * ரயில் இன்ஜின் 1,200 குதிரைசக்தி திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜூலை 25, 2025 20:17

இது போன்று மேலும் மேலும் வெற்றி சோதனைகளை கொடுத்து கொடுத்து காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமரமுடியாமல் அவர்களுக்கு சோதனை மேல் சோதனை கொடுக்கிறீர்கள்... இது நியாயமா, இது தர்மமா?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 25, 2025 15:48

எங்களுக்கெல்லாம் கூவத்தில் படகுவிட்டு தான் பழக்கம் .. உங்களைப்போல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சமாச்சாரம் ஆகாது .. மதவாத பிஜேபி ஒழிக என்று ஈர துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு இருநூறு ரூபாய்க்காக கதருவோம் .. கதறல் சவுண்டை பொருத்து கோழியும் பிரியாணியும் குவாட்டரும் கிடைக்கும் ..


Jack
ஜூலை 25, 2025 14:47

நகரங்களில் பஸ் கார் ஆட்டோ டெம்போ இவற்றில் பரிசோதனை செய்யலாமே


K.Uthirapathi
ஜூலை 25, 2025 14:15

வண்டி என்ன தண்ணிரிலா ஓடுகிறது என்று சொல்வார்கள். இன்று, அது நிரூபிக்கப் பட்டுள்ளது. நீரின் இரசாயன சுருக்கம் H2O, 2:1. ஃ இரு மடங்கு ஹைட்ரஜனும் அதில் பாதியளவு ஆக்ஸிஜனும் கலந்த கலவையே நீர். சுத்தமான நீர் மின்சாரத்தை கடத்தாது.


Sivagiri
ஜூலை 25, 2025 13:55

பழைய நிலக்கரி நீராவி இன்ஜினின் கரி புகை வராமல் , அந்த சவுண்ட் - - டிஷ்க் - டஷ்க் - டிஷ்க் - டஷ்க் -டிஷ்க் - டஷ்க் - சவுண்ட் மட்டும் இருந்தால் சூப்பரா இருக்கும் . . .


sundarsvpr
ஜூலை 25, 2025 13:30

தொழில் நுட்பம் குறைவாய் இருந்த காலத்தில் காணப்பட்ட அனுபவ சுகம் இப்போது உள்ளதா என்பது விமர்சனத்திற்கு உட்பட்டது. நிச்சியமாக இருக்காது. எனினும் கண்டுபிடிப்புகள் அறிவின் தீட்சண்யம்தான்.


Jack
ஜூலை 25, 2025 13:59

அப்போ எந்த வண்டியிலும் சரியான ஷாக் அப்ஸர்வர் இல்லாம அவஸ்தை பட்டார்கள்


SANKAR
ஜூலை 25, 2025 15:02

anubhava sugam 40 kmph plus udayil karipodi!


Ramesh Sargam
ஜூலை 25, 2025 13:29

வாழ்த்துக்கள்.


Rengaraj
ஜூலை 25, 2025 13:19

மிகவும் பெருமைக்குரிய விஷயம். தொழில்நுட்பம் மேம்பட்டு ரயில்வே துறை மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துகள். இப்போது பெரிய பெரிய கப்பல்கள் கட்டுமானத்துறையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் என்ஜின்கள் இயங்கும் வண்ணம் வடிவமைக்கிறார்கள்.பெட்ரோல், டீசல் இவற்றை சார்ந்து இல்லாமல் இதைப்போன்று மாற்று எரிபொருள் மூலம் நாட்டின் போக்குவரத்தை இயக்குவதன் மூலம் நாம் நிறைய அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம். நம் நாட்டில் இயங்கும் அனைத்து வகையான வாகனங்களும் பெட்ரோல் டீசல்களுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உடைய எரிபொருள் கொண்டு இயங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் இருக்கும். எரிபொருள் விலை குறையும். அதனைசார்ந்து இயங்கும் அனைத்து தொழில்களும் வளர்ச்சி பெறும் . வேலைவாய்ப்பு பெருகும். அதன்மூலம் பொருளாதாரம் மேம்படும்.


venkat
ஜூலை 25, 2025 13:18

மிக்க மகிழ்ச்சியான செய்தி.. இந்திய தேச முன்னேற்றத்தில் ஒரு நல்ல மைல்கல்


முக்கிய வீடியோ