உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டோனியா...! கோலியா...! யாரு பெரிய ஆளு; சந்திரபாபு சொன்ன நச் பதில் வீடியோ வைரல்

டோனியா...! கோலியா...! யாரு பெரிய ஆளு; சந்திரபாபு சொன்ன நச் பதில் வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: கிரிக்கெட் வீரர்களில் பெரிய லீடர் டோனியா, கோலியா என்ற கேள்விக்கு, 'எனக்கு விராட் கோலி தான் பிடிக்கும்' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா தொகுத்து வழங்கும் 'Unstoppable with NBK' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். பல்வேறு கேள்விகளுக்கு, சந்திரபாபு பதில் அளித்தார்.அப்போது, அப்போது நீங்கள் எம்.எஸ்.டோனியை போன்ற ஒரு தலைவர், நான் விராட் கோலியை போன்ற ஒரு வீரர் என்று பாலய்யா கூறினார். இதற்கு, எனக்கு எப்போதும் விராட் கோலி தான் பிடிக்கும் என்று சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி ஆதரவாளர்கள் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, கமென்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 23, 2024 12:58

அந்த திருப்பதி லட்டு விவகாரம் என்ன ஆச்சு? இப்பொழுது லட்டுகள் சுத்த நெய்யில், கலப்படம் இல்லாத நெய்யில் தயாரிக்கப்படுகிறதா?


Saai Sundharamurthy AVK
அக் 23, 2024 11:10

ரசிகர் பட்டாளம் என்று யாருக்கு தான் இல்லை. எல்லோருக்குமே உள்ளது. டோனிக்கும், விராட்கோலிக்கும் லட்சக்கணக்கில் இருக்கத் தான் செய்கிறார்கள். இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. எனக்கு கூட இரண்டு ரசிகர்கள் இருக்கிறார்கள்.....!!


P. VENKATESH RAJA
அக் 23, 2024 10:02

என்னைக்குமே டோனி தான் கில்லி


சமீபத்திய செய்தி