பயங்கரவாதிகளுக்கு சார்ஜர் கொடுத்தேன்: காஷ்மீர் தாக்குதலுக்கு உதவியவன் வாக்குமூலம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு உதவியவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கரவாதிகளை நான்குமுறை சந்தித்ததாகவும், அப்போது அவர்களுக்கு மொபைல்போன் சார்ஜர் கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா துவக்கியது.இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில், பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டனர்.அப்போது பகுதியளவு எரிந்த நிலையில் கிடந்த ' மொபைல்போன் சார்ஜர்' கைப்பற்றப்பட்டது.அதன் உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார் விசாரணையில், பயங்கரவாதிகளுக்கு உதவியது காஷ்மீரைச் சேர்ந்த முகமது யூசுப் கட்டாரி என தெரியவந்தது. அவரை செப்., இறுதியில் போலீசார் கைது செய்தனர்அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பயங்கரவாதிகளையும் நான்கு முறை ஸ்ரீநகர் அருகேயுள்ள ஜபர்வான் மலைப்பகுதியில் சந்தித்ததாகவும், மொபைல்போன் சார்ஜர் கொடுத்து உதவியதாகவும் கட்டாரி கூறினான். மேலும் பயங்கரவாதிகளுக்கு மலைப்பகுதியில் வழிகாட்டியதில் கட்டாரி முக்கிய பங்காற்றியதும் தெரியவந்துள்ளது.இந்த வழக்கு விரைவில் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்