உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளக்கமளிக்க வேண்டும்!

விளக்கமளிக்க வேண்டும்!

அமெரிக்க வரி விதிப்பு குறித்து, பார்லிமென்டில் மத்திய பா.ஜ., அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக காங்., குரல் கொடுக்கும்.சசி தரூர்லோக்சபா எம்.பி., - காங்.,

மவுனம் காப்பது ஏன்?

அமெரிக்க அரசின் வரி விதிப்பு தொடர்பாக, மற்ற நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி மட்டும் மவுனம் காப்பது ஏன்? நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் போதெல்லாம், அவர் அமைதியாகவே இருக்கிறார்.கவுரவ் கோகோய்லோக்சபா எம்.பி., - காங்.,

மிகப்பெரிய சீர்திருத்தம்!

லோக்சபா, ராஜ்யசபாவில் வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது ஒரு பெரிய சீர்திருத்தம். இது, முஸ்லிம்களுக்கு மிகவும் பயனளிக்கும். இனி வக்ப் சொத்துகள் அனைத்தும், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் துவங்கும் பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யப்படும். ஜெகதாம்பிகா பால்லோக்சபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை