உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி ரத்து: டில்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் வழக்கு

ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி ரத்து: டில்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியை ரத்து செய்ததை எதிர்த்த டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சர்ச்சை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர்.மஹாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சலுகைகளை பெற உடல் ஊனக் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.யு.பி.எஸ்.சி., விதிமுறைகளுக்கு மாறாக, அடையாளத்தை மறைத்தது என அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின. இதனையடுத்து அவரது ஐ.ஏ.எஸ்.தேர்ச்சியை பயிற்சி ரத்து செய்தது. மேலும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், இனி ஆணையம் நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க அவருக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.இதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபால கிருஷ்ணன்
ஆக 05, 2024 23:57

இதுவரையில் தேர்வாணையம் மட்டுமே இவர் மீது குற்றம் சுமத்தி அனைத்து நடவடிக்கைகள் எடுத்துள்ளன....பொருத்திருந்து பார்ப்போம் நீதிமன்றத்தில் இவரின் வாதம் என்னவென்று பார்ப்போம்....!!!


Mohanakrishnan
ஆக 05, 2024 23:04

Let us wait and see what she gets remedy as common sense fit for her case by seeing her behavior


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி