உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!

புவனேஸ்வர்: தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.47 லட்சம் சிக்கியதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திரிபுராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி திமான் சக்மா 36, ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தின் தரம்கர் பகுதியில் தற்போது பணியில் உள்ளார். 2021வது ஆண்டு பேட்ஜ் அதிகாரியான இவர் தற்போது தரம்ஹாரில் சப்-கலெக்டராக உள்ளார்.இந்நிலையில் திமான் சக்மா, உள்ளூர் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய போது நேற்று கையும் களவுமான பிடிபட்டார். அதனை தொடர்ந்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.47 லட்சம் பணம் கட்டு கட்டாக சிக்கியது.இது தொடர்பாக விஜிலென்ஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:குற்றம் சாட்டப்பட்ட திமான் சக்மா, கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் நேற்று ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டார். மேலும் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வேண்டும் என்றும் இல்லையெனில் அவரது தொழிலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினார். அதனை தொடர்ந்து, தரம்நகரில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபர் எங்களிடம் புகார் அளித்த நிலையில், புகார்தாரர் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்துடன் திமான் சக்மா வீட்டிற்கு சென்றார். அவரிடம் லஞ்சப்பணம் அளிக்கும்போது எங்களது அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரது அதிகாரப்பூர்வ வீட்டில் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக மேலும் ரூ.47 லட்சம் பணம் சிக்கியது.இவ்வாறு விஜிலென்ஸ் துறை அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mohanarangan
ஜூன் 11, 2025 20:11

முன் காலத்தில் பல்வேறு வெளி தேச கொள்ளையர்கள் பாரத தேசத்தின் சொத்துக்களை பல நூற்றாண்டுகளாக கொள்ளையடித்து சென்றார்கள். தற்போது இங்குள்ள ஊழல்வாதிகளும் லஞ்ச பேய்களும் கொள்ளையர்களாக இருக்கிறார்கள்... மனிதனின் பேராசையால் ஒருநாள் இந்த உலகம் அழிந்து விடும். ஒரேயொரு முறை கொள்ளையர்கள் மீது இறைவன் ருத்ர தாண்டவம் ஆடினால் நன்றாக இருக்கும். அப்போதாவது அறிவு வருமா என்று தெரியவில்லை.


selvam.G
ஜூன் 10, 2025 14:12

500 ரூபாய் நோட்டை ஒழித்தால் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் ஒரு கட்டுப்பாடு ஏற்படும். லஞ்சம் மூலம் பெறப்படும் பணத்தை பதுக்குவதில் ஒரு இயலாமை ஏற்படும். அரசு சிந்திக்க வேண்டிய காலம் ஏற்பட்டு விட்டது.


அப்பாவி
ஜூன் 10, 2025 06:40

பா.ஜ ஆட்சியில் ஊழல் அப்பிடியேதான் இருக்கு. முன்னாடி அரசியல்வாதிகள் அடிச்சாங்க. இப்போ அதிகாரிகள் அடிச்சு அரசியல்வாதிகளுக்கு பங்கு குடுக்கிறாங்க.


Padmasridharan
ஜூன் 09, 2025 22:14

அரசதிகாரிகள் என்றாலே லஞ்சதிகாரிகளாகத்தான் இருக்கிறார்கள். . இந்த பயங்கரவாதிகளை எப்படி அழிப்பது இந்திய நாட்டில் ji


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 21:30

பாவம். கட்டு போல விஞ்ஞான முறையில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 21:29

பாவம். 9 ம் வகுப்பு படித்த கட்டு போல விஞ்ஞான முறையில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை.


எஸ் எஸ்
ஜூன் 09, 2025 21:29

சப் கலெக்டராக இருக்கும்போதே 47 லட்சம் என்றால் கலெக்டர், அரசு செயலாளர், தலைமை செயலாளர் என்று உயர் பதவிகளுக்கு போனால் எவ்வளவு கல்லா கட்டுவார்?? UPSC இவர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்


Raghavan
ஜூன் 09, 2025 20:56

2021 பாட்ச். 4 வருடத்துக்குள் இவ்வளவு லஞ்சப் பணம். இவர் அநேகமாக மற்ற அசையா சொத்துக்கள் மேலும் தங்க வைர நகைகள் எல்லாம் லஞ்சப் பணத்தில்தான் வாங்கிருப்பார். அவைகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இவருடைய உறவினர் வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 09, 2025 20:30

It is time to reevaluate the need for IAS cader. Most of the newcomers are bent upon destroying the tem and the country.


Ramesh Sargam
ஜூன் 09, 2025 20:11

நாடு முழுக்க இப்படி ரைடு செய்தால், அதில் கிடைக்கும் பணத்தில் நாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கலாம்.


புதிய வீடியோ