உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!

பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ''பக்ரா அணை காலி செய்யப்படாவிட்டால் கூடுதல் தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்லும். தேச நலனுக்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் செயல்பட வேண்டும்'' என ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் நயாப் சிங் சைனி கூறியதாவது: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான் தனது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஹரியானாவிற்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மழைக்காலங்களில் மழைநீரை சேமிக்க ஜூன் மாதத்திற்கு முன்பு பக்ரா அணை நீர்த்தேக்கத்தை காலி செய்வது அவசியம். பக்ரா அணை காலி செய்யப்படாவிட்டால் கூடுதல் தண்ணீர் பாகிஸ்தானுக்குத்தான் செல்லும். தேச நலனுக்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் செயல்பட வேண்டும்.பக்வந்த் சிங் மான், குறுகிய கண்ணோட்டங்களுக்கு அப்பால் உயர்ந்து, நாட்டின் நலனுக்காக, ஹரியானாவிற்கு சரியான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். பக்ரா அணையின் நிலவரம் குறித்து அவர்கள் விளக்கவில்லை.ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி மற்றும் ஹரியானா அரசாங்கங்கள் எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு சொட்டு நீரையும் கண்காணிக்கின்றன.அரசியல் சுயநலத்திற்காக, அவர் உண்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஹரியானா மக்களை தவறாக வழிநடத்த முயன்றார். ஹரியானாவின் பங்கு நீரை தர மறுக்கின்றனர். டில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருந்த வரை, டில்லிக்கு தண்ணீர் அனுப்புவதில் பகவந்த் மான் எந்த ஆட்சேபனையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது, ஆம் ஆத்மி கட்சி டில்லியில் தோற்றதால், டில்லி மக்களை தண்டிக்க அவர் இதைச் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 30, 2025 14:27

பஞ்சாப் முதல்வருக்கு எந்த தண்ணீர் என்று தெளிவாக சொல்லுங்கள். அவர் தண்ணி அடித்து விட்டு விமானத்தில் ரகளை செய்தவர். திராவிட மாடல் கலாச்சாரம்


புதிய வீடியோ