வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சதி செயலில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்
சண்டிகர்: பஞ்சாபில் ஆயுத கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மிகப்பெரிய பயங்கர சதி செயல் முறியடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் ஆயுத கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இந்த தகவல் படி, பஞ்சாப் போலீசார் நடத்திய சோதனையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆயுத கடத்தல் கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தரன் தரனில் உள்ள நௌஷேரா பன்னுவான் கிராமத்தில் வசிக்கும் அருண் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒன்பது கை துப்பாக்கிகள் மற்றும் பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் இப்பகுதியில் சதி செயல்கள் செய்ய வாங்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோத ஆயுத சப்ளையர்களுடன் தொடர்பு இருந்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பஞ்சாபில் உள்ள குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்து உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆயுதச் சட்டம் மற்றும் BNS பிரிவின் கீழ், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுத கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய தீவிர விசாரணை நடந்து வருகிறது என பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.
சதி செயலில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்