உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்!

அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட் பிளேயர்: அந்தமான்நிகோபர் தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறி உள்ளதாவது; நவ.2ம் தேதி காலை 8.30 மணியளவில் கிழக்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாக தொடங்கியது. இந்த சூறாவளி சுழற்சி, சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து 5.8 கிமீ வரை நீண்டு காணப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின் வட மேற்கில் மியான்மர்-வங்கதேச கடற்கரையில் நகரத்தொடங்கும்.அப்போது வடக்கு அந்தமான் கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காற்றும் வீசும். நவ.4 முதல் இந்த புயல் மேலும் தீவிரம் அடையும். அதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கடல் தொடர்ந்து சீற்றமாகவே இருக்கும்.எனவே வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அப்பால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். படகு உரிமையாளர்கள், தீவுகளில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிலைமை சீராகும் வரை கடலில் பொழுது போக்கு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை