உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஜனநாயகத்தில் நிர்வாகம், சட்டம் இயற்றும் மன்றங்கள் அல்லது நீதித்துறை இவற்றில் எந்தப் பிரிவு மிகப்பெரியது என்ற விவாதம் இருந்து கொண்டு உள்ளது. பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் உயர்ந்தது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூலம் மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது.அரசுக்கு எதிராக உத்தரவை பிறப்பிப்பதன் வாயிலாக மட்டும் ஒரு நீதிபதி சுதந்திரமானவராக இருக்க முடியாது. அவர், எப்போதும் தனது கடமையை நினைவில் வைத்து இருக்க வேண்டும். குடிமக்களின் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பின் மாண்புகள் மற்றும் கொள்கைகளுக்கு நாம் தான் பாதுகாவலர்கள். நமக்கு அதிகாரம் மட்டும் இல்லை. நம் மீது கடமையும் சுமத்தப்பட்டு உள்ளது.தங்களது தீர்ப்பைப் பற்றி மக்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி சிந்தித்து நீதிபதிகள் செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். நீதித்துறையை பற்றி மக்கள் சொல்லும் விஷயங்கள் , நமது முடிவுகளை பாதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

R.Varadarajan
ஜூன் 27, 2025 16:56

இவர்களுடைய நல்ல காலம் இப்போது மோடியின்ஆட்சி இப்போது இந்திராவின் ஆட்சி இருந்திருந்தால்? இப்போது அமர்ந்திருக்கும ஆசனத்தில் உட்கார்ந்திருக்கமுடியுமா , இப்படி அறிவுறைகளை வாரி வழங்க வாய்ப்பு இருக்குமா?இவர்களுடைய பதவிக்காலத்திற்கு பொறவு?நீதித்துறை என்றும் நாடாளுமன்றத்தை விட எந்த விதத்திலும் உயர்ந்ததல்ல நீதித்துறையே அரசினால் நியமிக்கப்பட்து தானே? சுயம்புவா?


venugopal s
ஜூன் 27, 2025 11:13

இப்படி எல்லாம் உண்மை பேசினால் அவர்களுக்கு பிடிக்காதே!


Kathiravan
ஜூன் 27, 2025 07:13

அப்படினா அந்த லஞ்ச பணம் வைத்திருந்த கேடு கேட்ட மஜிஸ்திரேட்டை உடனே கைது செய்


Subburamu Krishnasamy
ஜூன் 27, 2025 05:23

Indian constitution was not d by the God. It is d by the Parliament, the members are elected by the citizens of the nation. Parliament has power to amendment the constitution in tune with modern developments. Now the learned judges must respect the Parliament. They are not above the Parliament. All are equal before the constitution and law of the land Why there are different guidelines to take action against the common man and peoples in judiciary committing crimes? A judge exposed to criminal activities not allowed to register Criminal case against the accused judge. Is it fair on the part of Supreme Court? Corruption is a corruption, crime is a crime. No body is superior beings before the law. Immunity to certain professionals involving in criminal activities should not be tolerated at any cost. First of all the Supreme Court must decide on accountability in judiciary. The learned judge's message is like a political statement, not desirable. It is better to avoid public statements about powers of the constitutional bodies. It has to be decided in the appropriate forum.


Kulandai kannan
ஜூன் 26, 2025 23:20

இவரது தந்தை ஆர்.எஸ்.கவாய் என்ற அரசியல்வாதிதானே


c.mohanraj raj
ஜூன் 26, 2025 23:17

அப்பவும் நீதித்துறையில் நூறு கோடி வழக்குகள் தேங்கி கிடப்பதை பற்றி அவமானமாக இல்லை இவருக்கு அப்படித்தானே அரசுக்கு எதிராகவே தீர்ப்பை சொல்ல வேண்டும் உலகிலேயே மிக மோசமான மிக மிக மோசமான நீதித்துறை இந்தியாவில் மட்டும் தான் உள்ளது பாகிஸ்தானில் கூட பரவாயில்லை போல


Krishnaswamy Balasundaram
ஜூன் 26, 2025 22:27

நம் பாரதம் உருப்பட முடியாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ...அதை செய்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 26, 2025 21:59

கொலீஜியம் என்பதே அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று. நீதிமன்றம் சட்டத்தை இயற்றவும் இடமில்லை. ஆனா அரசியல் சட்டத்திலேயே இல்லாததன் அடிப்படையில் நீங்க பதவிக்கு வந்திருக்கிறீர்.செல்லுமா செல்லாதா?


venugopal s
ஜூன் 26, 2025 21:44

அழகாகச் சொல்லி இருக்கிறார், ஆனால் அந்த மூடர் கூட்டத்துக்கு புரியாதே!


சிட்டுக்குருவி
ஜூன் 26, 2025 21:28

அரசியல் அமைப்பு சிறந்ததுதான் ,அந்த அரசியல் அமைப்பின் சட்டத்தின் பலன்கள் உடனுக்குடன் மக்களை சேர்ந்தடையும்போது .ஆனல் 24 வழக்குகள் 30 வருடங்களுக்கு மேலாக தேங்கிகிடைப்பதன் காரணம் மக்களுக்கு தெரியப்படுத்தினால் மக்களுக்கு அதுபுரியும் .


முக்கிய வீடியோ