உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செயல்படாத வங்கி கணக்குகள்: ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

செயல்படாத வங்கி கணக்குகள்: ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

மும்பை: செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், காலாண்டுக்கு ஒருமுறை அந்த கணக்குகளின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.செயல்படாத வங்கி கணக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி மேற்பார்வை துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வங்கி கணக்குகள் செயலற்றுப் போவதற்கும், உரிமை கோரப்படாத டெபாசிட் கணக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், நீண்ட காலமாக பரிவர்த்தனை நடைபெறாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் கே.ஒய்.சி., தகவல்களை புதுப்பிக்காதது உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.இதுகுறித்து வங்கிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளதாவது: சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டை விட, செயல்படாத கணக்குகள் அல்லது உரிமைக் கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக உள்ளது. எனவே, வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன், அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்ற எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.கே.ஓய்.சி., வாயிலாக, தடையற்ற முறையில் புதுப்பிக்க, மொபைல் அல்லது இணைய வங்கி, பிற வங்கிக் கிளை மற்றும் வீடியோ வாயிலாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். அரசுகளால் வழங்கப் படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகள், தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக்கூறி முடக்கப்படுவதைக் காண முடிகிறது. இதுபோன்ற வங்கி கணக்கை தனியாகப் பிரித்து, அவர்களுக்கு திட்டங்களின் நிதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்த, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை, செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை, மூத்த மேற்பார்வை மேலாளருக்கு, வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சாண்டில்யன்
டிச 05, 2024 09:11

வங்கி அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் காரணம் பிரச்சினையை தீர்க்க இதோ ஒரு வழி கணக்கு தொடங்கும் போதே நாமினேஷன் விபரங்கள் தருகிறோம் kyc விபரங்களை புதுப்பிக்கவும்னு அனுதினமும் sms போட தெரிந்தவர்கள் இதுபோன்ற காலாவதி கணக்கு வைத்திருப்பவருக்கோ அல்லது அவர்களது நாமினிக்கோ ஒரு sms email போட்டு முயற்சி செய்தார்களா என்று கேட்டு பார்க்குமா ரிசர்வ் வங்கி? அடுத்தவர் மீது பழிபோட்டு தங்களை மிகுந்த கடமை உணர்வு உள்ளவர்களாக காட்டிக் கொள்வதே இவாளின் டெக்னிக். அதே போல இப்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைன்னு பீத்திக்கிறது அரசு ஆனா வங்கியில் கார்டை நீட்டினா பணம் தருவதில்லை வித்ட்ராயல் பாரம் கொடுக்க சொல்கிறார்கள் எல்லாமே காகித பயன்பாடாக மாறியுள்ளது.


GMM
டிச 04, 2024 18:02

கணக்கு நடப்பில் இருந்தால், பழைய , புதிய கிளையில் விண்ணப்பித்து மாற்றலாம் ? தற்போது எங்கும் atm - இதில் விவரங்கள் பதிவு செய்து செயல்பட வைக்கும் வசதி தேவை. பணம் போட, ரேகை பதிவு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. ஒரு செல் எண் தான் இருக்கும். - ஈமெயில் வசதி . OTP - அனுப்பி சோதிக்கலாம். மீண்டும் வங்கி செல்வதை தவிர்க்க முடியும். நாமினியின் வங்கி கணக்கு விவரம் பதியலாம் .


GMM
டிச 04, 2024 18:03

கணக்கு நடப்பில் இருந்தால், பழைய , புதிய கிளையில் விண்ணப்பித்து மாற்றலாம் ? தற்போது எங்கும் atm - இதில் விவரங்கள் பதிவு செய்து செயல்பட வைக்கும் வசதி தேவை. பணம் போட, ரேகை பதிவு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. ஒரு செல் எண் தான் இருக்கும். - ஈமெயில் வசதி . OTP - அனுப்பி சோதிக்கலாம். மீண்டும் வங்கி செல்வதை தவிர்க்க முடியும். நாமினியின் வங்கி கணக்கு விவரம் பதியலாம் .


சாண்டில்யன்
டிச 04, 2024 15:47

பலரும் இடம் பெயர்ந்து விடுகிறார்கள் கணக்கை வேறு கிளைக்கு மாற்றவும் கணக்கு உள்ள வங்கி கிளையில்தான் ஆதார் பாண் கார்டு ஆதாரங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது வேறு மாநிலத்துக்கு போனவர்கள் இதற்காக வேலை வெட்டியை விட்டு வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக புதிய ஊரிலுள்ள கிளையில் வாடிக்கையாளர் தனது ஆதார் பாண் விவரங்களை கொடுத்து மாற்றிக் கொள்ள அனுமதிப்பதில் தவறில்லை குற்றம் நடக்க வாய்ப்பில்லை. இந்த வசதி இல்லாமலே பல்லாயிரம் கணக்குகள் முடங்கி கிடக்கின்றன.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:33

செயல்படாத வங்கிக்கணக்குகளை டார்மென்ட் அக்கவுண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.. வாடிக்கையாளரின் முகவரிக்கே சென்று காரணத்தை அறிந்து/அறிவுறுத்தி முடிவெடுக்க வேண்டும்.... சேவைகளுக்கு கட்டணக் கொள்ளை, குறைந்த பட்ச வைப்புத் தொகை இல்லாவிட்டால் அபராதம் என்றெல்லாம் சுரண்டும் வங்கிகள் அதையும் செய்யவேண்டும் ....


Kanns
டிச 04, 2024 13:08

Ruling Party Govts Loots People With Various Excuses for Lavish-Extra vagant Expenses incl 50% Non Working Govt Officials


Kanns
டிச 04, 2024 13:06

Govt Expanding Looting Supreme People for Lavish Extravagant Expenditures incl VFatly PaidBut Only50%Workng GovtOfficials etc etc


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 04, 2024 11:24

சுமார் ஐந்து கோடி இந்தியர்கள் அயல் நாடுகளில் பணி புரிவதாக ஒரு புள்ளி விபரம் படித்தேன். அது உண்மையானால், அந்த ஐந்து கோடி இந்தியர்களின் வங்கி கணக்குகளும் செயல்படாத கணக்குகளா? அது போலவே அந்த ஐந்து கோடி பேர்களில், ஒரு அனுமானமாக, நாலில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு பேர்களின் மனைவியரும் அயல் நாடுகளில் தான் இருப்பார்கள். அவர்களது வங்கி கணக்குகளும் செயல்படாத கணக்குகளா? அப்படிப்பட்டகணக்குகளில் சுமார் ஓராண்டுக்கு மேல் வரவு பற்று இல்லாமல் இருந்தால் வங்கி வட்டி கொடுப்பதை நிறுத்தலாம். கணக்கை முடக்குவது சரியல்ல. குறைந்தபட்ச இருப்புத் தொகை அரசுக்கு மூலதனமாகத்தானே பயன்படுகிறது.


Gnanam
டிச 04, 2024 14:17

நீங்க வேற...அப்படி வெளி நாடு போனானா இப்பொ யாரோ அக்கௌன்ட் ஆக்கணும்..இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..அது அமெரிக்கா,இங்கிலாந்து ஓகே...இங்க வளைகுடா பெரிய வருமானம் கிடையாது...அவங்களும் நெய்,அமெரிக்கா கிரீன் கார்டு ஹோல்டர் அவனுக்கும் ஒரே விதி..இது சரி இல்ல்லா


அப்பாவி
டிச 04, 2024 08:30

கணக்கை மூடி அதில் இருக்கும் பணத்தை ஆட்டையப் போட்ருவாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:29

குடும்பக்கட்சி அடிமைக்கு அதே குடும்பத்தின் புத்தி .....


Kalyanaraman
டிச 04, 2024 07:52

அரசு சார்ந்த பல இடங்களில் வங்கிகள் உள்பட, இன்னும் சுதந்திரத்திற்கு முன்னால் போட்ட நடைமுறைக்கு ஒவ்வாத சட்டத்தை வைத்துக் கொண்டே ஓட்டுகிறார்கள். இவற்றையெல்லாம் களை எடுக்க, எடுக்க பிரச்சனை குறையும்.


முக்கிய வீடியோ