உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வனப்பகுதி அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

வனப்பகுதி அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

டேராடூன் : கடந்த 2021 - 2023 காலகட்டங்களில் நாட்டில் காடுகள், மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ., அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.உத்தரகண்டில் நடந்த நிகழ்ச்சியில், 2023ம் ஆண்டுக்கான வன நிலை அறிக்கையை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் நேற்று வெளியிட்டார். கடந்த 1987 முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் நாட்டின் வனப்பகுதி தொடர்பான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு, வன நிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வனப்பகுதி, மரங்களின் அடர்த்தி, சதுப்புநிலக் காடுகள், காடுகளில் கார்பன் இருப்பு, காட்டுத்தீ நிகழ்வுகள், வேளாண் காடுகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய மதிப்பீட்டின்படி, வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 8.27 லட்சம் சதுர கி.மீ., ஆகும். இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம். இதில், 7.15 லட்சம் சதுர கி.மீ., வனப்பகுதியாகவும், 1.12 லட்சம் சதுர கி.மீ., மரங்களின் அடர்த்தியாகவும் உள்ளது. கடந்த 2021ல், 7.14 லட்சம் சதுர கி.மீ.,யாக இருந்த வனப்பகுதி, 2023ல் 7.15 லட்சம் சதுர கி.மீ., ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, காடு, மரங்களின் பரப்பு 1,445 சதுர கி.மீ., அதிகரித்துள்ளது. இதில், வனப்பகுதி 156 சதுர கி.மீ.,யும், மரங்களின் அடர்த்தி 1,289 சதுர கி.மீ.,யும் அதிகரித்துள்ளது.மொத்த பரப்பளவில், வனப்பகுதி மிகுந்த மாநிலங்களில் மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை