உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுகாதார துறைக்கான நிதி அதிகரிப்பு

சுகாதார துறைக்கான நிதி அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுகாதாரத் துறைக்கு, கடந்தாண்டை விட இந்தாண்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.பகுதிநேர பணியாளர்களுக்கு பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது; 1 கோடி பணியாளர்கள் பயனடைவர்.இந்திய மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த, விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, தனியாருடன் இணைந்து செயல்பட முடிவு.ஆயுஷ் அமைச்சகத்துக்கான நிதி 3,497.64 கோடி ரூபாயில் இருந்து 3,992.90 கோடி ரூபாயாக உயர்வு.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 99,858.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு; கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி, 89,974.12 கோடி ரூபாய்.தேசிய சுகாதார பணிக்கான ஒதுக்கீடு 36,000 கோடி ரூபாயில் இருந்து, 37,226.92 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பிரதமர் மருந்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான நிதி, 7,605.54 கோடி ரூபாயில் இருந்து, 9,406 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை