உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை!

பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நம் ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. கராச்சி துறைமுகம் மீது ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மும்பையில் மீனவர்களுடன் இந்திய கடற்படை ஆலோசனை நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டு வந்துள்ளது. துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஈசன்
மே 09, 2025 22:56

எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கப்பா என்று கேட்பது போல் இருக்கிறது நம் கடற்படை வீரர்களின் பாடி லாங்குவேஜ்.


RAVINDRAN.G
மே 09, 2025 12:29

வாங்கிய ஆயுதத்தை பரிசோதனை செய்து பார்க்க இதுவே சரியான தருணம். சீனா தயாரிப்போட தகுதி எப்டின்னும் கண்டுபிடிக்க நல்ல வாய்ப்பு. மேலும் நாம் ஆயுதப்பூஜைக்காக வாங்கவில்லை. நல்ல வாய்ப்பு . இந்த மூடர்களை மூர்க்கர்களை ஒழித்துக்கட்ட சரியான நேரம் இதுவே ஆகும். அப்படியே பலுசிஸ்தான் தனி நாடாக பிரித்து பாக்கிஸ்தான் எல்லையை முடிந்தவரை சுருக்குங்க ஐயா. காஷ்மீருக்காக பயங்கரவாதத்தை ஊக்கிவித்தவன் அவன் நாடு அழிவதை தூண்டுவதை பார்க்கவேண்டும். கிடைத்த நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு செலுத்தாமல் இந்தியாவை பார்த்து பொறாமை கொண்டால் உள்ளதும் போய்விடும்.


xyz
மே 09, 2025 11:51

நாடு முழுவதும் நாள் முழுவதும் பல நாட்களாக தீவிரவாதம் தீவிரவாதத்தை முறியடிக்க நாட்டில் உள்ள ஒட்டுமோத்த படைகளும் , பல லச்சம் கோடிகள் கொட்டி வாங்கிய உலகின் மிக விலையுயர்ந்த போர்தளவாளங்களுடன் கூடிய போர் .


முக்கிய வீடியோ