உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடகிழக்கு மாநிலங்களை காட்டி சீனாவுடன் வங்கதேசம் பேரம் இந்தியா கண்டனம்

வடகிழக்கு மாநிலங்களை காட்டி சீனாவுடன் வங்கதேசம் பேரம் இந்தியா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கக் கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ளதால் இப்படி பேசுவதாக கூறியுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, ராணுவத்தின் உதவியால் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதன் தலைமை ஆலோசகராக, நோபல் பரிசு வென்றுள்ள முகமது யூனுஸ் உள்ளார்.

நிதி நெருக்கடி

மாணவர் போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகமாயின. இதையடுத்து, வங்கதேசத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் வங்கதேசம் சிக்கியுள்ளது. குறிப்பாக, அந்த நாட்டில், சீனா அதிகளவு முதலீடுகள் செய்துள்ளது. சீனாவின் கடன்களை அடைக்க முடியாமல் வங்கதேசம் திணறுகிறது.இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை, முகமது யூனுஸ் சமீபத்தில் சந்தித்தார்.அப்போது, 'இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அவை வங்கக் கடலை அணுகுவதற்கு வழியே இல்லை. எனவே, இந்த பகுதிகள் வங்கக் கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக, வங்கதேசம் உள்ளது.'அதனால், வங்கதேசத்தில் சீனா அதிக முதலீடுகளைச் செய்து உற்பத்தி, சந்தைப்படுத்துதலை அதிகரித்தால் நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும்' என, யூனுஸ் கூறினார்.

இது குறித்து நம் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

தன் நாட்டில் அதிக முதலீடுகள் செய்வதற்காகவும், கடனுக்கான வட்டியை குறைக்கவும் சீனாவிடம் வங்கதேசம் கோரியுள்ளது. அதற்காக அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது.ஏற்கனவே, தெற்காசியாவில் தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, பல நாடுகளுக்கு கடன் உதவிகளை சீனா வழங்கியுள்ளது. அதன் வாயிலாக அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறது.

பதிலடி

சீனாவின் இந்த கடன் வலையில், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கனவே சிக்கியுள்ளன. தற்போது, வங்கதேசமும் சிக்கியுள்ளது. அதையே யூனுசின் பேச்சு வெளிப்படுத்துகிறது.இந்தியாவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அவர் பேசியுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலங்கள், வங்கதேசத்தின் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளதாக கூறுவது, சீனாவின் ஊதுகுழலாக அவர் செயல்படுவதாகவே தெரிகிறது.இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மிரட்டல் விடுக்கும் நோக்கத்துடன், சீனாவின் மொழியாக அவருடைய பேச்சு உள்ளது.வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் எந்த ஒரு நிலப்பரப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட விடமாட்டோம்.நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம். தகுந்த நேரத்தில் அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

கண்ணன்
ஏப் 01, 2025 11:37

இந்த லூசிற்கு நோபல் பரிசு பரிந்துரைத்த அமெரிக்கா தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். கிராமின் வங்கி என்ற ஒரு கொள்ளையடிக்கும் திட்டத்திற்காக பரிசு கொடுக்கப்பட்டதாம்! அடிமடியிலேயே கொள்ளையடிக்க, அங்கிருந்து திரத்தியடிக்கப்பட்வருக்கு அடைக்கலம் ஜார்ஜ் ஸோரஸ்… விளங்கிடும்


M Ramachandran
ஏப் 01, 2025 11:26

கை வைக்க வேண்டிய நேரம். இனி சும்மா விட கூடாது


M Ramachandran
ஏப் 01, 2025 11:24

திருடன் உடன் பக்கா திருடன் & பலே பலான முக மூடி கொள்ளைகாரா திருடன் சந்திப்பு.


தஞ்சை மன்னர்
ஏப் 01, 2025 10:50

நீங்க பாகிஸ்தான் பற்றி பேசுவது இல்லையா அதுபோலத்தான்


N Srinivasan
ஏப் 01, 2025 10:48

திரும்ப போ உன்னோட நாட்டுக்கு உனக்கு எல்லாம் ஒரு நோபல் பரிசு


vbs manian
ஏப் 01, 2025 09:10

சீனாவை உசுப்பி விடுகிறார். தலைவலி.


Dharmavaan
ஏப் 01, 2025 09:08

எல்லாவற்றுக்கும் மூல காரணம் டெல்டா பகுதிகளை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுத்த துரோகிகள் காந்தி நேருவே


Kumar Kumzi
ஏப் 01, 2025 09:02

கேடுகெட்ட எண்ணம் கொண்ட மூர்க்க காட்டுமிராண்டி கூட்டம் அழிவை நோக்கி செல்கிறது


KRISHNAN R
ஏப் 01, 2025 08:42

நன்றி இல்லா


Gopal
ஏப் 01, 2025 08:22

வங்க தேசத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை