உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெக்கா நகரம் மீது டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்

மெக்கா நகரம் மீது டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்

புதுடில்லி:சவுதி அரேபியாவின் மெக்கா நகரை நோக்கி டிரோன் வாயிலாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.மெக்கா நகரின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். எனினும், மெக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்குள் அந்த ட்ரோனை சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தி தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.மெக்கா அருகே டிரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. சவுதி அரேபியாவில் இறையாண்மை மிக்க பகுதிகளில் தாக்குதல் நடத்துவதும், அப்பாவி மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா தனது கண்டனத்தை மீண்டும் உறுதி செய்கிறது.உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடமான மெக்கா அருகே நடத்தப்பட்ட தாக்குதல் கவலை அளிக்கிறது. இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் திரும்பும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 17, 2026 12:23

சண்டைன்னு வந்துட்டா இப்படி தான்


veeramani
செப் 17, 2026 09:24

மனிதன் அனைவருக்கும் அவர்களது இறைவழிபாட்டில் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது அவர்களது புண்ணிய கோவிலையோ தளங்களையோ சேதப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றச்செயல்


Natarajan Ramanathan
செப் 17, 2026 01:07

அந்த கருப்பு கட்டிடம் மீது ஒரே ஒரு குண்டு போட்டாலே உலகில் உள்ள பல பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்ந்துவிடும்


Haja Kuthubdeen
செப் 17, 2026 07:33

நீ போயி போட்டு பாரேன்...நல்ல பாதுகாப்பான இடத்தில் முகவரிய மறைத்து வாழும் கோழை நீ...