உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை அவசியம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் ஜெப ஆலயத்தில் வழிபாட்டின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவாலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய சமூகம் ஒன்றுபட்டு போராடி தோற்கடிக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். இந்த துயர தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் ஆதரவாக இருப்போம். இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர், நெதன்யாகு

மான்செஸ்டரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குல் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். பயங்கரவாதத்தை வலிமையும், ஒற்றுமையையும் இருந்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.

பிரிட்டன் பிரதமர், கெய்ர் ஸ்டார்மர்

மான்செஸ்டரில் நடந்த தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஜெப ஆலயங்களுக்கு கூடுதல் போலீஸ் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். யூத சமூகத்த்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது யூதர்களைத் தாக்கிய ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல். யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது. அதனை நாம் தோற்கடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kumar Kumzi
அக் 03, 2025 13:02

காட்டுமிராண்டிகளினால் உலகமே அமைதியிழந்து தவிக்கிறது தமிழ்நாட்டிலும் வெகு விரைவில் நடக்கும்


Sampath
அக் 03, 2025 12:21

பிரிட்டன் முஸ்லீம் வசமாகி பல வருடங்களாகி விட்டன பாக்கிஸ்தான் வழி மேயர் லண்டன் வந்து பல காலம் அகிலிட்டி vittathu....


Rathna
அக் 03, 2025 11:35

பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஆப்பிரிக்காவில் இருந்து மூடன்களை மொத்த கொள்முதல் செய்ததால் வந்த வினை. பிரிட்டன், இந்தியாவிற்கு செய்த மூட்டை மூட்டையான பாவத்திற்கு அனுபவிக்கிறது.


Ramesh Sargam
அக் 03, 2025 11:28

அந்த மூர்க்க கும்பல், அந்த அமைதி மார்க்கத்தினர் உலகில் எங்கு இருந்தாலும் உலக மக்கள் அனைவருக்கும் பிரச்சினைதான். அந்த பயங்கரவாதிகளின் கூடாரம் சிதைக்கப்படவேண்டும் உலகெங்கிலும்.


M Ramachandran
அக் 03, 2025 10:53

மூர்க்க கும்பலால் உலகமெ அச்சுறுத்தளுக்கு ஆளாய் வருகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2025 09:19

மூர்க்கத்தின் கோரத்தாண்டவம்... இன்னும் இருக்கு உலகம் பார்க்க வேண்டியது ......


Ram thevar. Thampikkottai
அக் 03, 2025 09:18

பிரித்தாலும் சூழ்ச்சியில் இந்தியாவை இன்றளவும் பழிவாங்குகிறது பிரிட்டன், இன்று அதை அனுபவிக்க துவங்குகிறது இதுதான் ஆரம்பம் பிரிட்டனுக்கு. இந்தியா சுமார் 75 வருடங்களாக போராடி வருகிறது இந்த தேசவிரோத தீயசக்திகளிடமிருந்து.


கடல் நண்டு
அக் 03, 2025 08:38

தற்போது பிரிட்டனுக்கு மிகச்சிறிய அளவிலான அனுபவம் … இந்தியா எத்தனை ஆண்டாக போராடி வருகிறது … இன்னும் என்ன எல்லாம் நடக்க போகுதோ…


சமீபத்திய செய்தி