உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு

நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது.புதுடில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.இன்றைய நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5364 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 4724 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கேரளாவில் அதிக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. ஒருநாளில் 192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதற்கு அடுத்து, குஜராத்(107), மேற்கு வங்கம்(58), டில்லி(30) பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

angbu ganesh
ஜூன் 07, 2025 17:53

அது வரும் போகும் . பாகிஸ்தான் மேல சந்தேகம் இருக்கு .இங்க இருக்கிற தேச துரோகிங்களை நாடு கடத்திட்டா எல்லாம் சரி ஆகிடும்


Ramalingam Shanmugam
ஜூன் 07, 2025 13:06

நம்ம மர்ம மனிதர்கள் தான் காரணம்


அப்பாவி
ஜூன் 07, 2025 12:36

ஒன்றிய அரசு ஏற்கனவே எச்சரிக்கை ச்ற்றறிக்கை அனுப்பிருச்சு. கடமை முடிஞ்சிருச்சு.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:23

கொரோனா பரவலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன? அதைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். பரவல் சீரியஸ் ஆகும் வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். சீரியஸ் ஆன பிறகு பலவித கட்டுப்பாடுகள் கொண்டுவருவார்கள்.


முக்கிய வீடியோ