உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவம்பர் மாதத்துக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

நவம்பர் மாதத்துக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் கையெழுத்தாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரை 5 சுற்று பேச்சுகள் நடந்த நிலையில் முடிவு எடுக்கப்படவில்லை. பால் பண்ணைத் துறைதான் இந்தியாவுடனான பேச்சில் இழுபறியாக இருக்கிறது. வேளாண்மை, கால்நடைத் துறைகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதில் இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.இதனிடையே, இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 6வது சுற்று பேச்சுவார்த்தை தள்ளி போயுள்ளது.இந்நிலையில், டில்லியில் வர்த்தக சேம்பர் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இரு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் புவிசார் அரசியல் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்தும் சரியாக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புகிறேன். இரு நாட்டு தலைவர்களும் பிப்ரவரியில் முடிவு செய்தபடி இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னர் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது.உலகின் பல நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், பிரிட்டன், மற்றும் ந ான்கு ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. அமெரிக்கா உடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 11:52

அப்பாவிகள் சிலருக்கு அடி பணிந்து தான் வர்த்தக ஒப்பந்தம் நடைபெறும் என்று நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் பின்னால் இருந்து பார்ப்பவர்கள் இது போலத்தான் தோன்றும். ஏற்கனவே இங்கு உள்ள தொழிற்சாலைகள் தலைமை அலுவலகங்கள் ஜெர்மன் சென்று அந்த தொழிற்சாலை உயர் அதிகாரிகள் பார்த்து கெஞ்சி ஒரு எம்ஓயூ போட்டு விட்டு அதை உலக அளவில் விளம்பரம் செய்யும் விளம்பர பிரியர்கள். இந்த எம்ஓயூ போட்டாலும் போடா விட்டாலும் அந்த கம்பெனிகள் இங்கு மூதலீடு செய்யும் ஏனெனில் இலாபத்தை முழுமையாக அவர்களால் கொண்டு செல்ல முடியாது. ஆகவே அவர்கள் இலாபத்தின் ஒரு பகுதியை இங்கு மூதலீடு செய்து தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வார்கள். தொழிலை விரிவு படுத்துவார்கள். தொழிலாளர் நலனுக்காக அதிகம் செலவிடுவார்கள். கோவையில் புரூக் பாண்ட் நிறுவனம் இயங்கி வந்த பொழுது தொழிலாளர்களுக்கு பத்து பைசா டீ இருபத்தி ஐந்து பைசா மதிய சாப்பாடு தீபாவளி பண்டிகை பொழுது பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலை பட்டாசுகள் போன்றவை இலாபத்தை முழுமையாக கொண்டு செல்ல முடியாது என்பதால் இது போன்று கொடுத்தார்கள். இதை அறிந்த திராவிட மாடல் கட்சிகள் இது போன்ற கம்பெனிகள் இடம் இருந்து பணத்தை பிடுங்க ஆரம்பித்த பின்னர் தான் கோவையில் உள்ள மில்கள் செளத் இண்டியா விஸ்கோஸ் மால்கோ போன்ற நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் தொழிற்சாலைகளை மூடி விட்டனர்.


அப்பாவி
செப் 03, 2025 03:57

அப்போ அடிபணிய மாட்டோம்னு சொல்றதெல்லாம்?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 04:52

பொய்யா கோப்பால்?


Ramesh Sargam
செப் 03, 2025 00:37

எனக்கென்னமோ இப்படி தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது இந்தியா மீதான வைராக்கியத்தை குறைத்துக்கொண்டு, அமெரிக்க நாட்டு நலன் மற்றும் இந்திய நாட்டு நலன், மற்றும் உறவை கருத்தில்கொண்டு, அவராகவே இந்தியா மீது விதித்துள்ள அந்த அதிக வரியை குறைப்பார் என்று தோன்றுகிறது. ஏதோ போராதகாலம் டிரம்ப் அப்படி செய்துவிட்டார். அவரை நாம் மன்னிப்போம். உறவை புதுப்பிப்போம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 04:55

கால்லே விழுந்து மன்னிச்சிடுங்கோ. சமூகம் ஒத்துக்குவார்.


ManiMurugan Murugan
செப் 02, 2025 23:05

அமெரிக்காவின் விஞ்ஞான உற்பத்தி மரபணு மாற்றம் இவையெல்லாம் குளிர் பிரதேசக்காரர்களுக்கு நன்று சீனா உக்ரைனுக்கு வியாபாரம் செய்ய ட் டு ம் பாரத த் தை ஏன் குறி வைக்கிறது அமெரிக்கா இது வளர்ந்த நாட்டின் பண்பாடு ற் க்கு சிறந்ததா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை