உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: 4 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: 4 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், ''இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது'' என தெரிவித்தார்.நமது நாட்டில் ரயில் பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து புதிதாக எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று ( நவ.,08) காலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nbzcyqxv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: புதிய 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நகரின் வளர்ச்சி என்பது சிறந்த போக்குவரத்து தொடர்பு கிடைத்ததும் தொடங்குகிறது. உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள் நெடுஞ்சாலைகளுடன் நின்று விடுவதில்லை. புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடர்புகளை மேம்படுத்தி மக்களுக்கு கூடுதல் வசதியை தரும். பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் புனித யாத்திரைத் தலங்களில் வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. வாரணாசியில் உள்ள புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் உ.பி.யின் பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பங்களித்துள்ளனர். வாரணாசிக்குச் செல்வதையும், இங்கு தங்குவதையும் அனைவருக்கும் ஒரு சிறப்பு அனுபவமாக மாற்றுவதே எங்கள் முயற்சியாக இருக்கிறது. புதிய ரயில் சேவைகள் சுற்றுலா துறையில் வளர்ச்சியை உருவாக்கும். உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். எர்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் மத்திய அமைச்சரும், பாஜ எம்பியுமான சுரேஷ் கோபி குழந்தைகளுடன் கலந்துரையாடி சாக்லேட்டுகளை வழங்கினார்.

4 புதிய வந்தே பாரத் ரயில்கள்!

இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த 4 வந்தே பாரத் ரயில்கள் சிறப்புகள் என்னென்ன?* 1. எர்ணாகுளம் - பெங்களூருஎர்ணாகுளம்- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 7 இடங்களில் நின்று செல்லும். இரண்டு முக்கிய ஐடி மற்றும் வர்த்தக மையங்களை இணைப்பதால், வல்லுநர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறுவதுடன் தமிழகம், கேரளா, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடங்களாக குறையும்.2. பனாரஸ் - கஜூராகோஉ.பி.,யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.,யின் கஜூராகோ இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.3. லக்னோ - ஷஹாரான்பூர்உ.பி.,யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான இன்று தொடங்கப்பட்டு உள்ள வந்தே பாரத் ரயில் சேவையால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும். 4. பிரோஸ்பூர் - டில்லிபஞ்சாபின் பிரோஸ்பூர் - டில்லி இடையே இன்று தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவை மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும். வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

V Gopalan
நவ 08, 2025 16:29

In the long run, Vande Bharat will be a burden to Railways due to fare and certainly will become an express train which can be afforded by middle class and below poverty. Earlier there was a passenger train from Yeshwanthapur to Karaikkal and now diverted via Arakonam if it is right. Public from Tamilnadu to Karnataka are travelling for business, employment, tourist et all but it is not known that Railways have much of the employees from Kerala, hence other States are taking back seat.


V Gopalan
நவ 08, 2025 16:24

Is there any agreement, any trains are introduced will be to Kerala only. Whether the Railways Headquarters are at Ernakulam? From Mysore/Bengaluru there is only one train Mysore Tuticorin, Mysore Cuddalore port. Fare of Vande Bharat express is not for the middle class or below poverty, it is only for elite class. Instead of augmenting some more trains from Mysore/Bengaluru to Madurai, Tirunelveli, Tanjore, Mayiladuthurai, go on giving maximum importance to Kerala only. Trains leave from SMVT is far away from City and also those trains will reach destination of Madurai on odd hours. It is better to change the name of Indian Railways to Kerala Railways. There are MEMU trains are running more than 200 to 300 Kms and beyond why not introduce the MEMU train from Bengaluru to Madurai, Tanjore and beyond. It is better Railway Minister can shift Rail Bhavan from Delhi to Ernakulam.


SRPRD
நவ 08, 2025 21:19

It's their attitude of discrimination against TN, due to which they deliberately don't run sufficient trains to big cities in TN. Mysore Mayiladuthurai is booked at least 3-4 weeks in advance. Can't they introduce a late night train from BLR to Thanjavur ?


Barakat Ali
நவ 08, 2025 13:56

அதென்ன ஜி........ நீங்க மட்டும்தான் துவக்கி வைக்கணுமா???? அப்போ நீங்க உங்க வேளையில் பிசியா இல்லையா ????


Apposthalan samlin
நவ 08, 2025 12:05

வந்தே பாரத் வேஸ்ட் திருநெல்வேலியில் இருந்து மெட்ராஸுக்கு செகண்ட் கிளாஸ் ஸ்லீப்பர் 425 rs வந்தே பாரத் இல் 1600 ருபாய் சீட்டும் சரி கிடையாது எஸ்குடிவே 3200 சீட் பரவாயில்லை அதனால் sleeeper கிடைக்காதவர்கள் பயணம் செய்கிறார்கள் full ஆவது கிடையாது எப்போதும் காலி தான் சீட் எளிதாக கிடைக்கும் .என்ன ஒன்னு சீக்கிரமா போய் விடலாம் நாலு மணி நேரம் மிச்சம் .


SANKAR
நவ 08, 2025 14:38

VB 7.45 hours .Guruvayoor 10.45 hours.Saving 3 hours only.besided VB only 7 halt and guruvayoor 19 halts.so speed of VB not reason for reduction in travel time.As far as Chennai Bengaluru saving of time almost nil when we compare Shadabdi and VB


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 08, 2025 12:05

கடந்த பத்தாண்டுகளில் கோவைக்கு ரயில்வேத்துறையால் கிடைத்த புது திட்டங்கள் ரயில்கள் ஏதாவது உண்டா?


Vasudevamurthy
நவ 08, 2025 11:28

Most of the roads are in bad condition Stray dogs and cattle moving around everywhere.


Indian
நவ 08, 2025 10:30

வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும் வட மாநிலங்கள் மட்டுமே


vivek
நவ 08, 2025 10:47

அறிவிலி. இங்கு டாஸ்மாக் வளர்சி இருக்கே


vivek
நவ 08, 2025 10:49

முன்னேறிய மாநிலம் என்று ஒருவர் கூவினார்...கைலாசம்.....அது பொய்யா


முருகன்
நவ 08, 2025 12:59

முதலில் உங்களை சுற்றி இருப்பவர்கள் சிலரை குடிக்காமல் தடுக்க முடியுமா உங்களால் ?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 08, 2025 10:15

ஏற்கனவே பெங்களூரு கோவை மற்றும் கோவை பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ,கோவை எர்ணாகுளம் , எர்ணாகுளம் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை கோவை வழியாக பெங்களூரு எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆக்கினார்கள். அதையே இப்போது கூடுதல் கட்டணத்தில் வந்தே பாரத் என்ற பெயரில் இயக்குகிறார்கள். புதிய ரயில்கள் கோவைக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை நன்றாகவே தெரிகிறது.


முருகன்
நவ 08, 2025 10:25

இதற்கு பெயர் தான் வளர்ச்சி


SANKAR
நவ 08, 2025 12:02

same speed as in rajdhani 1984.this is make up valarchi


vivek
நவ 08, 2025 13:50

if same speed what problem?? need more speed go by ambulance


SANKAR
நவ 08, 2025 14:26

progress means more speedy trains .for example chinese trains running at 55 kmph in 1908s are now running at 450 kmph and they are moving towards 1000 kmph and bullet train tracks are for 48000 kms from 2800 kms some ten years ago


SANKAR
நவ 08, 2025 16:16

which ambulance runs at 450 kmph?


சமீபத்திய செய்தி