உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் மீது இந்தியா பீரங்கி தாக்குதல்

பாகிஸ்தான் மீது இந்தியா பீரங்கி தாக்குதல்

புதுடில்லி: ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானை குறி வைத்து, இந்தியா பீரங்கி தாக்குதல் நடத்தியது/ஜம்முவில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, பதிலடி தரும் விதமாக, பாக்., நிலைகளை குறி வைத்து, இந்தியா பீரங்கி தாக்குதல் நடத்தியது. காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த ட்ரோன்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த ட்ரோன்கள் வெடிபொருட்களுடன் வந்ததாக தெரிய வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக, கடந்த புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், 9 பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில், 100 பேர் வரை மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை