உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேரிடரால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவுக்கு 9வது இடம்; 30 ஆண்டுகளில் 80,000 பேர் பலி

பேரிடரால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவுக்கு 9வது இடம்; 30 ஆண்டுகளில் 80,000 பேர் பலி

புதுடில்லி: இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 என்ற மாநாட்டில் ஜெர்மன்வாட்ச் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம், 'பருவநிலை அபாய குறியீடு 2026' எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1995 முதல் 2024ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.15,000 கோடியளவுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன், வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகம் பாதித்த நாடாக டொமினிகா உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா நாடுகளுக்கு அடுத்ததாக, 9வது இடத்தில் இந்தியாவும், 10வது இடத்தில் பஹாமாஸ் நாடுகளும் உள்ளன.இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு குஜராத் புயல், 1999ல் ஒடிசா சூப்பர் புயல், 2013ல் உத்தரகண்ட் வெள்ளபாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 2024ம் ஆண்டில் மட்டும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
நவ 12, 2025 11:30

புள்ளிவிவரம் பாதகமா இருந்தா பழைய வருசங்களையும் சேர்த்து குடுப்பாங்க. சாதகமா இருந்தா 2014 லேர்ந்து குடுப்பாங்க.


KRISHNAN R
நவ 12, 2025 09:53

இனிமே சென்னை முதல் கன்னியாகுமரி வரை, ஏன் கடல்தாண்டியும் , பில்டிங் தான்


Ganapathy Subramanian
நவ 12, 2025 09:17

80000 ஆயிரம் உயிரிழப்புகளில் 10000 க்கு மேல் சுனாமியில் உயிரிழந்தவர்கள். அதை கணக்கிலிருந்து எடுத்துவிட்டால், கணிசமாக குறையும். அதோடு நம் நாட்டில் புயலால் ஆயிரக்கணக்கில் உயிரிழந்த வரலாறு எல்லாம் உண்டு. அதெல்லாம் இருபத்தோராம் நூற்றாண்டில் கணிசமாக குறைந்துள்ளது. சராசரி மழையளவு என்பது 30 ஆண்டுகால மழையை கணக்கில் கொண்டு சொல்லப்படுவதைப் போல இதையும் 30 ஆண்டு கணக்கில் சொல்கிறார்கள் என்று புரிகிறது.


sundarsvpr
நவ 12, 2025 08:19

பாரதம் ஒரு பாதுகாப்பு நாடு. இயற்கை பேரழிவு தடுக்க இயலாது. இயற்க்கை வழித்தடங்களை அழித்து வேறு பணிகள் செய்வது தான் பேரழிவிற்கு காரணம். மழைநீர் சேமிப்பு ஒரு அளவிற்கு தான் இருக்கவேண்டும் கடலில் ஜலம் கலக்கவேண்டும். மண் தரை இல்லாவிடில் பூமி நீரை உறிஞ்சாது. இரண்டும் சரிவர இயங்கினால் பேரிடர் ஏற்பட்டாலும் தாங்க இயலும்


A. Muthu
நவ 12, 2025 08:09

சுனாமி பாதிப்பு பேரிடர் இல்லையா....


Ramesh Sargam
நவ 12, 2025 08:04

பேரிடர் பாதிப்புக்கு முக்கிய காரணம், அனைத்து நாட்டிலும், குறிப்பாக இந்திய நாட்டில், இயற்கை வளங்களை அழிப்பதால்தான். இயற்கையை அழிப்பது, அதாவது காடுகளை அழிப்பது, ஏறி, குளம், குட்டை, ஆறுகள், நதிகள் எல்லாவற்றையும் மணலுக்காக சுரண்டி, அங்கே தண்ணீரை வற்றவைத்து, சிமெண்ட் கட்டிடங்கள் கட்டுவது. இப்பொழுதெல்லாம் விவசாய நிலங்களை கூட விட்டுவைப்பதில்லை மதிகெட்ட மானிடர்கள். ஆக பேரிடர் பாதிப்புக்கு முக்கிய காரணம் மதிகெட்ட மானிடர்கள். இப்பொழுது அழுது புலம்புவதும் அதே மதிகெட்ட மானிடர்கள். திருந்துங்களடா மதிகெட்ட மானிடர்களே.


முக்கிய வீடியோ