உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதில் முதல் இடத்தில் இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்

அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதில் முதல் இடத்தில் இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்யும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.டில்லியில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐ.எம்.டி.,) 150வது நிறுவன தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது;இந்த 150 ஆண்டுகளில், ஐ.எம்.டி., கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் அறிவியல் பயணத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. இன்று, இந்த சாதனைகள் குறித்து ஒரு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியில்லாத விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது . நிலநடுக்கங்களுக்கான எச்சரிக்கை மையங்களை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த திசையில் செயல்பட வேண்டும். எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்யும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.எந்தவொரு நாட்டில் ஏற்படும் பேரிடர்களுக்கு வானிலை ஆய்வு மிக முக்கியமான ஆதரவை வழங்குகிறது. இயற்கை பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க, வானிலை ஆய்வின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில், உலக வானிலை துறையின் பொதுச்செயலாளர் செலஸ்டி சாலோ, புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், புவி அறிவியல் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், ஐஎம்டி இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மற்றும் ஏராளமான உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.RAMACHANDRAN
ஜன 15, 2025 07:37

அண்டை நாடுகளுக்கு உதவி செய்து பதக்கங்கள் பெறுவதில் வல்லவரான இவர் உள் நாட்டில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி ஏதும் செய்வதில்லை.


தாமரை மலர்கிறது
ஜன 14, 2025 23:43

நாம் மட்டும் பணக்கார நாடாக இருந்தால் போதாது, அண்டை நாடுகளுக்கும் தாராளமாக உதவி செய்யவேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டவர் மோடி.


Ramesh Sargam
ஜன 14, 2025 21:20

அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்டத்தில் ஏட்பட்டிருக்கும் காட்டு தீயை அணைக்க இந்தியா என்ன செய்தது?


Sampath Kumar
ஜன 14, 2025 19:17

இல்லை ஏன்றால் உங்க கோவணம் காற்றில் தானடி


அப்பாவி
ஜன 14, 2025 19:06

அஞ்சு பைசா போட்டு நான் செஞ்சேன் நான் செஞ்சேன்னு பீற்றல்.


K.n. Dhasarathan
ஜன 14, 2025 17:20

அண்டைநாடுகளுக்கு உதவி செய்யலாம் தான், ஆனால் இலங்கை போல நம்பிக்கை துரோகிகளுக்கு செய்வது மிக கேட்டது, அதற்க்கு அவர்கள் லாயக்கு இல்லாதவர்கள், தமிழக மீனவர்கள் படும் துயரங்களுக்கும், பொருளாதார நஸ்தங்களுக்கும், தொழில் முட்டுக்கட்டைக்கும், வாழ்வாதார இளப்பிற்கும் அவர்கள்தான் காரணம், பிரதமருக்கு தமிழர்கள் என்றால் இளக்காரம், இதே குஜராத் மீனவர்கள் சிக்கினால், தானே பேசுவார், இப்போது வாயை திறக்கமாட்டார், அங்கெ சீனாக்காரன் முகாம் அமைக்கிறான், நம்மை வேவு பார்க்கிறான், ஆனால் நம்மவர் வாயை திறக்க மாட்டார், இந்த பயம் ஏனோ ?


புதிய வீடியோ