உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 114 அதிநவீன போர் விமானம் வாங்க மத்திய அரசு திட்டம்

114 அதிநவீன போர் விமானம் வாங்க மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: இந்திய விமானப் படையை நவீனமாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு 114 அதி நவீன போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப் படையை நவீனமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விமான படையின் உபகரணங்களை மேம்படுத்தும் முயற்சி 2007ம் ஆண்டு துவங்கியது. அந்த வகையில், இந்த ஆண்டு 114 போர் விமானங்களை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி உள்ளது. இது நாட்டின் போர் விமானங்களின் இருப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.சீனா தனது விமானப்படையை வேகமாக விரிவுபடுத்தும் நேரத்தில், இது நல்ல முடிவு. இந்திய விமானப் படைக்கு இந்த திட்டம் மிகவும் முக்கியமானது என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணர் லக்ஷ்மன் பெஹெரா கூறியதாவது: சீனர்கள் நவீன போர் விமானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தானும் சீனாவின் ஆதரவைப் பெறுகின்றது. அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் போர் விமானங்கள் பற்றாக்குறையாக உள்ளன, என்றார். உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியாவிற்கு ரஷ்யா பல தசாப்தங்களாக முக்கிய ஆயுதங்களை வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவிற்கு சொந்தமான முக்கிய போர் விமானங்களின், சுகோய் சு-30எம்.கே.ஐ., எச்.ஏ.எல்., தேஜாஸ் முக்கிய ஒன்றாக திகழ்ந்து வருகின்றன. இந்தியாவிற்கு எப்.,35 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
பிப் 16, 2025 07:44

அமெரிக்கா யார் காசு கொடுத்தாலும் ஆயுதங்கள் விற்பார்கள்!


Sivagiri
பிப் 15, 2025 22:39

பழையன கழிதலும் புதியன புகுதலும் . . . ஆனாலும் , கோடானு கோடி கோடியாய் கொட்டி வாங்கப்படும் , ராணுவ விமானங்கள் கப்பல்கள் தளவாடங்கள் , உபயோகப் படுத்தாமலே , பழையன ஆகிவிடும் , , மக்களின் / அரசின் கஜானா பணம் கரைகின்றது . . .


Tetra
பிப் 16, 2025 09:49

போர் வந்தால்தான் அவை உபயோகப்படும். அதில் பல்லாயிரம் வீரர்கள் மட்டுமல்லாது மகான்களும் உயிரிழப்பர். நமக்கு ஆயுதம் தேவை . போர் தேவை இல்லை


m.arunachalam
பிப் 15, 2025 22:01

தன்னிறைவு என்பது கனவுதான் நல்ல கல்வி நிறுவனங்களில் 45 சதவிகிதம் எடுத்தவர்கள் உள்ளே, 90 சதவிகிதம் எடுத்தவர்கள் வெளியே .


Ramesh Sargam
பிப் 15, 2025 21:56

நாட்டை எதிரி நாடுகளிடமிருந்து காப்பாற்ற போர் விமானங்கள் தேவை. ஓகே. ஆனால் நம்நாட்டிலேயே இருக்கும் தேசவிரோதிகளிடமிருந்து நம் நாட்டை எப்படி காப்பாற்றப்போகிறீர்கள்?


Tetra
பிப் 16, 2025 09:52

உச்ச நீதி மன்றத்தின் அதிகாரத்தை பாதுகாப்பு விஷயங்களில் குறைத்தால் போதும். எதிரிகளுக்குக்கூட ஊட்டி விட சொல்லும் உச்ச நீதிமன்றம்.


Ramesh Sargam
பிப் 15, 2025 19:49

நாட்டின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்.


அப்பளாசாமி
பிப் 15, 2025 19:36

அமெரிக்காவுக்கு லேகியம்,ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் அதிகமாயிருக்கு.


Sankar Ramu
பிப் 15, 2025 20:31

தமிழக முதல்வரின் அமெரிக்க வர்த்தக மாநாட்டிலே இது நடக்கும்.


Ray
பிப் 15, 2025 18:35

வாஷிங் மெஷினையே தூக்கி டபிள் ப்ளீச் வாஷ் பண்ணிட்டாரே ட்ரையம்ப் ட்ரீம்ப் ஒன்லி இம்ப்போர்ட் நோ எக்ஸ்போர்ட் saathanaithaan


Kalyanaraman
பிப் 15, 2025 20:18

ஆம்., தொழில்நுட்பங்கள் இறக்குமதி. சீனாவை எதிர்க்க / சமாளிக்க அமெரிக்காவின் வல்லமை இறக்குமதி. பாரதத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி. இப்படி ஒன்லி இம்போர்ட். பிகு: ஏற்கனவே இந்திய ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது.


Kasimani Baskaran
பிப் 15, 2025 18:16

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இந்தியாவின் பலத்தை வெகுவாக அதிகரிக்கும்.


Jay
பிப் 15, 2025 15:11

அமெரிக்காவுடன் இந்திய உறவு வலுப்பெறும். அதோடு இந்தியாவின் தேஜாஸ் விமானங்களையும் மேம்படுத்தி அமெரிக்கா பிரான்சு சைனா போர் விமானங்களுக்கு இணையாக தரம் மேம்படுத்த வேண்டும்.


சமீபத்திய செய்தி