உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா!

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7r10wenb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்திய அதிகாலை தாக்குதலில், ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு நேற்று இரவு இந்தியா மீது ஏவுகணையால் தாக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது. பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது. பஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது. தற்போது பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பெரிய ராசு
மே 08, 2025 18:12

சீனா தயாரிப்பு அடுப்பு குழல்..பாகிஸ்தானியர்களுக்கு ஆட்டுமூளை ...


theruvasagan
மே 08, 2025 17:39

சீனா பட்டாசு எல்லாம் டூப்ளிகேட் சரக்குன்னு பக்கிகளுக்கு தெரியாது. அந்த அளவுக்கு மூளை வேலை செய்யாது. மண்டை மொத்தமும் மதவெறியும் மூர்க்கத்தனமும் இருந்தா சிந்திக்க வருமா. மலிவா கிடைக்குதேன்னு ஆடித் தள்ளுபடியில் வாங்கி போட்டுட்டானுக போல. இப்ப எல்லாம் புஸ்வாணமா போச்சு.


karthikeyan
மே 08, 2025 15:05

குண்டூசி முதல் குண்டு வரை அனைத்துமே போலி ....


A1Suresh
மே 08, 2025 14:45

பாக். பாடும் பாடல்.. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாட தோன்றும்


Madras Madra
மே 08, 2025 13:48

எல்லாம் சீன தயாரிப்பா இருக்கும்


Ramaswamy Sundaram
மே 08, 2025 12:45

கெடுவான் கேடு நினைப்பான்


sridhar
மே 08, 2025 12:40

1965 ல் மற்றும் 1971 லும் அமெரிக்கா கொடுத்த டேங்க் மற்றும் ஜெட் இவைகளை பயன்படுத்த தெரியாமல் பாக் படுதோல்வி அடைந்தது. திறமை அற்ற மத வெறி மட்டும் கொண்ட இந்த பக்கிகளுக்கு எவ்வளவு sophisticated ஆயுதங்கள் இருந்தாலும் தோல்வி தான்.


Karthik
மே 08, 2025 12:33

ஜெய்ஹிந்த்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை