உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்தணும்: பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்தணும்: பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 'பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்த வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.பயங்கரவாத தாக்குதல் நடத்திய நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t3xd8awp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை மிலனில் நடைபெற உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆளுநர்கள் குழுவின் 58வது ஆண்டு கூட்டத்திற்கான நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இந்திய அதிகாரிகள் குழுவிற்கு சீதாராமன் தலைமை தாங்குகிறார்.இந்நிலையில் இத்தாலி சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தாலி பிரதிநிதி ஜியான்கார்லோ ஜியோர்கெட்டிக்யை சந்தித்து பேசினார். அப்போது அவர் 'பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தியதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடனான சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

bogu
மே 06, 2025 06:49

மேடம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்


ராமகிருஷ்ணன்
மே 05, 2025 22:14

பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமல் தடுப்பதும் ஒரு வகையான போர் தந்திரம் தான்.


Ramesh Sargam
மே 05, 2025 20:35

இந்தியாவுக்கு மற்ற நாடுகள் ஆதரவு அதிகம் இருந்தாலும், இந்தியா முடிந்த அளவு தனியாக பாகிஸ்தானுடன் போரிட்டு வெல்லவேண்டும். பாகிஸ்தான் இனி நம்மிடம் வாலாட்டவே கூடாது. வால் முற்றிலும் கத்தரிக்கப்படவேண்டும்.


ஆரூர் ரங்
மே 05, 2025 19:50

இட்டாலியம்மா சோனியா ஏற்க மாட்டார். சீனாவின் உற்ற நண்பர் அவர்.


அப்பாவி
மே 05, 2025 18:30

இந்தியா திரும்புன சூட்டோட இத்தாலி பயணம்.வெளிநாடு போய் உழைக்கிறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை