உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி

2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 2028ல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயரும். அதன் மூலம் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என முன்னணி நிதிச் சேவை நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம். இந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cmwb7smb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2023ல் 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது. வரும் 2026ல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வரும் 2028ம் ஆண்டிற்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும். கடந்த 1990ம் ஆண்டில் உலகின் 12வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000ம் ஆண்டில் 13வது இடத்துக்கு பின்தங்கியது. 2020ல் 9ஆவது இடத்துக்கும், 2023ல் 5ஆவது இடத்துக்கும் முன்னேறியது.உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும். வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும். உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், 2025ம் ஆண்டில் இந்திய பங்குகள் விலைகள் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Seekayyes
மார் 15, 2025 06:25

அது 'மார்கன் ஸ்டான்லி', மோர்கன் அல்ல. மோர்கன்னாவது, தயிர்கன்னாவது. இந்த லட்சணம்தான் இரு மொழி கொள்கை.


अप्पावी
மார் 15, 2025 06:22

2008 ல அமெரிக்க பொருளாதாரம் சூப்பர்னு சர்டிபிகேட் குடுத்தவங்க இவிங்களேதான்.


B MAADHAVAN
மார் 14, 2025 22:28

தற்போதைய ஆட்சி மத்தியில் தொடர்ந்து நீடித்தால், இந்தியா நிச்சயம் பொருளாதாரத்தில் மூன்று அல்ல... முதல் நாடாக மாறினால் கூட ஆச்சரியப் பட அவசியமில்லை. வலிமையான அரசு.. திறம்பட அனைத்து நாடுகளையும் அரவணைத்து செல்லும் விதம் எல்லாம் அருமை. அந்த மத்திய அரசின் அருமை மற்ற நாடுகளுக்கு தெரிகிறது. தமிழகத்திற்கு மட்டும் இன்னும் புரியவில்லை.


Seekayyes
மார் 15, 2025 06:21

அது புரிய போவதும் இல்லை.


Narayanan Muthu
மார் 14, 2025 20:41

கதை சொல்ல ஆயிரம் பேர் கதை கேட்கத்தான் நாதியில்லை.


Srinivasan Krishnamoorthy
மார் 14, 2025 21:01

go to pakistan. pakistan pm says they will become better economy


Bhagavathirajm
மார் 14, 2025 20:02

பட் வி ஹவ் தி டிபிபிறேன்ட் டு நம்பர் 3 டு 3


m.arunachalam
மார் 14, 2025 19:21

இது ஒரு தேவையற்ற அங்கீகாரம் / மதிப்பீடு . அதிக அளவில் மக்கள் மாக்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர் நம் நாட்டில் . அரசாங்கம் குற்றங்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு மிக அதிகமாக செலவு செய்யவேண்டியுள்ளது . வரி சுமையும் கூடிக்கொண்டே போகிறது .


Srinivasan Krishnamoorthy
மார் 14, 2025 21:02

getting third big economy is the big status overcoming European nations. if you don't accept please go to pakistan


முக்கிய வீடியோ