உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று(ஏப்ரல் 25) ஸ்ரீநகர் சென்றடைந்தார்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஸ்ரீநகர் சென்றார். அவர் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். அவரிடம் அங்குள்ள ராணுவ உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

l.ramachandran
ஏப் 25, 2025 19:35

tourist ஸ்பாட்டை ஏன் பாதுகாக்கவில்லை. உள்ளூர் போலீசோ அல்லது பாதுகாப்பு படையினரோ எங்கே இருந்தார்கள். அந்த நான்கு தீவிரவாதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் நடந்து நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.


Bhakt
ஏப் 25, 2025 14:57

சீக்கிரமா பொறிக்கிஸ்தான் இருந்த இடம் அடையாளம் தெரியாம ஆக்குங்க.


thehindu
ஏப் 25, 2025 11:13

நாட்டின் பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை இப்படி அரசியல்வாதிகளைப்போல் நேரடி வர்ணனை செய்வது கீழ்த்தரமான வேலை.


Mettai* Tamil
ஏப் 25, 2025 12:15

ஆமா நீங்க ரொம்ப தரமான வேலை. செயிரிங்க ....


பேசும் தமிழன் l
ஏப் 25, 2025 13:26

உங்களை போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்கள் இருக்கும் வரை..... அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.