உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்ம முதலாளி, நல்ல முதலாளி! 4,500 ஊழியர்களை வெளிநாடு சுற்றுலா அனுப்பிய தொழிலதிபர்

நம்ம முதலாளி, நல்ல முதலாளி! 4,500 ஊழியர்களை வெளிநாடு சுற்றுலா அனுப்பிய தொழிலதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹனோய்: இந்திய தொழிலதிபர் திலிப் சங்வி தமது நிறுவன ஊழியர்கள் 4,500 பேரை வியட்நாமுக்கு இன்பச்சுற்றுலா அனுப்பியது, சமூக வலைதளத்திலும், தொழில் துறையினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தொழிலதிபர்

இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் திலிப் சங்வி. 1955ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர்; கோல்கட்டாவில் வளர்ந்தவர். தமது தந்தை தொடங்கிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை அவருக்கு பின்னர் ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்திய பணக்கார தொழிலதிபர்களின் வரிசையில் 5வது இடத்தை பிடித்திருப்பவர்; போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பவர்.

4,500 ஊழியர்கள்

பெரும் செல்வந்தர், தொழில் நிறுவனங்களின் உரிமையாளராக இருந்தாலும் அவர் செய்த ஒரு செயல் இன்று பலரையும் பாராட்ட வைத்து இருக்கிறது. தமது மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் 4,500 ஊழியர்களை வியட்நாம் நாட்டுக்கு இன்பச்சுற்றுலா அனுப்பி வைத்துள்ளதே இதற்கு காரணம்.

வியட்நாம் சுற்றுலா

4,500 ஊழியர்களும் மொத்தம் 6 தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு வியட்நாம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 26ம் தேதி முதல் நேற்றைய தினம் வரை அவர்கள் விமானங்களில் குழுவாக வியட்நாம் நாட்டுக்குச் சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் மொத்தம் 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை வியட்நாம் நாட்டின் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சிறை

முதலில் தலைநகர் ஹனோய், ஹாலாங், நின்பின் ஆகிய பகுதிகளை ஊழியர்கள் சுற்றி பார்த்தனர். 1964ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை அமெரிக்க விமானிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஹோலோ சிறை,புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றை கண்டு களித்தனர்.

மொழி பெயர்ப்பாளர்

பின்னர் அங்கிருந்து மாசோலேனம், ஹலாங் பே உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஊழியர்கள் தங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, மொழி பெயர்ப்பாளர்கள் என அனைத்தும் முன்னரே திட்டமிட்டவாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புதிய அனுபவம்

சுற்றுலா என்றால் ஏதோ சாதாரணமானதாக இருக்கும் என்று நினைத்துச் சென்ற ஊழியர்களுக்கு வியட்நாம் பயணம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. புதிய அனுபவங்கள், புதிய இடங்கள் என பல்வேறு அனுபவங்கள் கிடைத்து இருப்பதாகவும், அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 2 வார கால சுற்றுலாவை ஒருங்கிணைப்பது எளிதான காரியம் அல்ல, ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக வியட்நாம் நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அவர்கள் நன்றியும் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

P.N.RAGURAMAN
ஆக 30, 2024 11:53

குட்


Rajesh Kumar
ஆக 30, 2024 02:24

இது முதல் முறையல்ல .கடந்த 18 ஆண்டுகளாக எங்களை அவர் வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுலா அனுப்புகிறார். ❤️?


Satish Chandran
ஆக 29, 2024 14:05

சங்கி தத்திகள் என்ன கிழித்தார்கள்?


புதூர் கணேசன்
ஆக 28, 2024 16:17

தினமலர் மதுரை பதிப்பில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜெய்ப்பூர் டில்லி ஹரித்வார் பஞ்சாப் பொற்கோயில் வாஹா பார்டர் ஆக்ரா மதுரா என பத்து நாட்கள் வரலாற்று சுற்றுலா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் அந்த நினைவலைகள் பசுமையாக இருக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 28, 2024 14:09

அடடே ........ நல்லா இருக்கே ....... நம்ம திராவிட தத்திகளும் இருக்குதுங்களே ..... ஒரு ஊ பீயி ன் வருத்தம் ....


N.Purushothaman
ஆக 28, 2024 13:49

அற்புதம் .....வாழ்த்துக்கள் ..


முக்கிய வீடியோ