உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடற்படையில் சேர சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி 12ம் வகுப்பு மட்டுமே!

கடற்படையில் சேர சூப்பர் சான்ஸ்; கல்வித்தகுதி 12ம் வகுப்பு மட்டுமே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கடற்படையில் காலியாக உள்ள எஸ்.எஸ்.ஆர்., மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17.சீனியர் செகண்டரி ரெக்ரூட்மெண்ட் (எஸ்எஸ்ஆர்) மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்திய கடற்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தற்போது வெளியிடப்படவில்லை.

கல்வி தகுதிகள் என்ன?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

01.11.2003 முதல் 30.04.2007ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்வது எப்படி?

உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 17.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
செப் 08, 2024 13:11

இளைஞர்கள் அதிக அளவில் சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்றலாம், விமானப்படை, கடற்படையில் சயின்ஸ் மாணவர்களுக்கு முன்னுரிமை , காரணம், எல்லாமே ரேடார் தொடர்புடையவைகள், பள்ளிகளில் பயின்ற பாடங்களை ஆழ்ந்து படித்தால் தேர்ச்சி பெறுவது உறுதி . யாருடைய சிபாரிசும் தேவையே இல்லை, முப்படைகளின் பணியாற்றினால் தேசப்பற்று வளரும், தேசியக்கொடிக்கும் , தேசிய கீதத்துக்கும் தன்னையறியாமலேயே இரத்தம் தானாக வீரஉணர்ச்சியுன் உடலில் பாயும் . வந்தே மாதரம்


அர்ஜுனன்
செப் 08, 2024 09:04

சுமார் ரெண்டு லட்சம் பணியிடங்கள் இருக்காம்.


புதிய வீடியோ