உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய கடற்படை சாதனை

3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய கடற்படை சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அணுஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட கே-4 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.உலகில் மிகவும் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அணு ஆயுத திறன் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.இந்நிலையில், நேற்று விசாகப்பட்டினம் கடல் அருகே, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து அணுஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் கொண்ட கே-4 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்தது இந்திய கடற்படை.இந்த பாலிஸ்டிக் ஏவுகணை 3,500 கி.மீ., துாரம் சென்று இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. நவம்பர் 27 முதல் 30ம் தேதி வரை இந்த கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என இந்திய பாதுகாப்பு படை, ஏற்கனவே பொது எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து கே- 4 ஏவுகணை சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஐஎன்எஸ் அரிஹன்ட் மற்றும் அரிகாட் ஆகிய இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் உள்ளன, அவை பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்டவை. விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கப்பல் கட்டும் மையத்தில் அரிகாட் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இதுபோன்று மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
நவ 28, 2024 20:45

இதுபோன்ற சாதனைகள் பாஜக ஆட்சியில் நடப்பது, நமது நாட்டு எதிர் கட்சியினருக்கு, நமது நாட்டு தேசதுரோகிகளுக்கு வெறுப்பேத்துகிறது. ஆகையால்தான் அவர்கள் பாஜக ஆட்சிக்கு எதிராக அபபிரச்சாரம் செய்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்.


Indian
நவ 28, 2024 17:15

எல்லா புகழும் அப்துல் கலாம் ஐயாவுக்கு சாரும் .


சந்திரன்,போத்தனூர்
நவ 28, 2024 17:37

நீ அவ்வப்போது மண்டையில இருக்க கொண்டையை மறைக்க மறந்துடுற...


Anand
நவ 28, 2024 18:40

கலாம் என்றால் கலகம் என ஒரு தீயசக்தி கூறியது, வெட்கம் இல்லாமல் உன்னோட கூட்டமும் இன்று வரை தீயசக்தி வகையறாக்களுக்கு முட்டுக்கொடுத்து சீரழிந்துக்கொண்டிருக்கிறது.


A. Kumar
நவ 28, 2024 17:08

ஜெய் ஹிந்த்.பாரத்மாதாகி ஜெய்


Seshadri Duraiswamy
நவ 28, 2024 16:25

வாழ்த்துக்கள்


Palanisamy Sekar
நவ 28, 2024 16:20

ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. எதிரிகளை வெல்ல பல ஆயுதங்களை செய்து உலகிற்கு உணர்த்திடும் அதே நேரத்தில் உள்நாட்டில் உள்ள தேச துரோகிகளை களைந்திட என்ன செய்வது என்று தீவிரமாக சிந்திக்கும் நேரமிது. சபாஷ் விஞ்ஞானிகளே உங்களது தேசப்பற்றுக்கும் அறிவாற்றலுக்கும் ஒவ்வோர் இந்தியனும் பாராட்டுகின்றோம் . ஜெய் ஹிந்த்


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 16:16

கடந்த பத்தாண்டுகளாக முப்படைகளின் பாதுகாப்புக்காகவும், யுத்த தளவாடங்களுக்காகவும், ஏவுகணைகள் உற்பத்திக்கும், ஆராய்ச்சி அபிவிருத்திக்காகவும் பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை ..... இத்தனையும் செய்து நல்லவர்களுடன் சேர்த்து தேசவிரோதிகளையும் ராணுவம் பாதுகாத்து வருகிறது ......


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 16:15

காங்கிரஸ் அரசுகள் கடந்த காலங்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை ..... பாகிஸ்தான் கூட அப்போது நம்மிடம் அஞ்சவில்லை ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை