உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு இ-ஆதார்; பயணிகளுக்கு புதிய வசதி

தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு இ-ஆதார்; பயணிகளுக்கு புதிய வசதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திடீர் பயணத்திற்கு எளிதில் ரயில் டிக்கெட் பெறும் வகையில், விரைவில் இ-ஆதார் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் நிறுவனம் பயணியருக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் பயணியர், ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தட்கல் முறை இருந்து வருகிறது.எனினும், இந்த தட்கல் முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் பாதிப்புக்குள்ளாவதாகவும், தொழில்நுட்ப குறைபாடுகளை ஆய்வு செய்து களைய, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது.ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேருக்கு இணையதளம் வேலை செய்யவில்லை என புகார் எழுந்து வருகிறது. இதனால் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐ.ஆர்.சி.டி.சி., நீக்கியது. இந்நிலையில், திடீர் பயணத்திற்கு எளிதில் ரயில் டிக்கெட் பெறும் வகையில், விரைவில் இ-ஆதார் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, இ-ஆதார் கட்டாயம் செய்யப்படும். இது உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்டு டிக்கெட்டுகளைப் பெற உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த புத்தம் புதிய அறிமுகம் குறித்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kanns
ஜூன் 06, 2025 11:31

Sack, Arrest& Punish ALL including this PowerMisusing StoogeMinister for Compelling ModiMental AadharSpyMaster for Everything esp Basic CitizenServices Despite being NOPROOF of Citizenship & for ILLEGALLY PROVIDING All Citizen Services to Billions of Foreign Infiltrators Given Aadhar by ModiBJP for ILLEGALLY Regularising as Citizens. SHAME ON BJP


Chandru
ஜூன் 06, 2025 16:25

Think the one who has given this sort of silly comment was not steady while forwarding this trash.


rama adhavan
ஜூன் 05, 2025 16:45

முதலில் ஏஜென்சி நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். திருப்பதியில் முதியோர் இலவச தரிசனத்திற்கு உள்ளபடி அங்கு 3 மாதங்களுக்கு ஓரு முறை ஒருவர் 2 டிக்கெட்கள்தான் மாதத்திற்கு, பதிவு செய்யப்பட்ட இ மெயில் ஐ டி இல் இருந்து செய்ய வேண்டும். முடிந்தால் ஐ ஆர் சி டீ சி சொந்த இ மெயில் அஞ்சல்களை பயனாளிகளுக்கு உருவாக்கி கண்காணிக்கலாம். போலிகளை இது தடுக்கும்.


Rengaraj
ஜூன் 05, 2025 16:25

ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு இன்ஜினியரிங் சீட் எவ்வாறு ஒதுக்கப்படுகிறதோ அதை முன்னுதாரணமாக கொண்டு தட்கல் முறை செயல்பட வேண்டும். தட்கல் டிக்கெட் முறையில் அப்ளை பண்ணுவதற்கு தினமும் காலை ஒன்பது மணி முதல் ஒரு மணி நேரம் அல்லது ரெண்டு மணிநேரத்தை ரயில்வே துறை ஒதுக்கலாம். அந்த நேரத்தில் யார் வேண்டுமென்றாலும் முன்பதிவு எப்போதும் செய்யலாம் என்று சொல்லலாம். ஒதுக்கப்பட்ட முன்பதிவு நேரம் முடிந்தவுடன் காலை பதினோரு மணி முதல் முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்கள் கேட்ட சீட்டை அவர்களுக்கு ஒதுக்கி ஒதுக்கப்பட்ட சீட்டுக்குண்டான பணத்தை கட்டுவதற்கு அவர்களுடைய மின்னஞ்சலில் லிங்க் அனுப்பி கட்டுவதற்குண்டான நேரம் குறைந்த பட்சம் அரைமணி நேரம் குறிக்கலாம். அதற்குள் பணம் கட்டவில்லையென்றால் அந்த லிங்க் செயல் இழந்து அடுத்தவரிசையில் உள்ளவருக்கு சீட் தானாக ஒதுக்கலாம். லிங்க் அனுப்பும் செயல்முறையை பகல் பன்னிரண்டு அல்லது ஒரு மணி வரை ரயில்வே துறை செய்ய வேண்டும். மதியம் இரண்டு மணி அல்லது மூன்று மணி வரையில் இந்த ஒதுக்கீட்டு முறைக்கு பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டுவரலாம். இதனால் இணையதளம் முடக்குவது தவிர்க்கப்படலாம். அப்படியும் இடம் மீதம் இருந்தால் கரண்ட் ரிசர்வேஷன் முறையில் மாலை நான்கு மணிமுதல் அந்த இடங்களை பூர்த்தி செய்யலாம். மின்னஞ்சல் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் லிங்க் செயல்படவேண்டும் என்று இருந்தால் சர்வர் பிரச்சினைகளை ஓரளவு சமாளிக்கலாம். பரீட்சார்த்தமாக ராஜதானி, வந்தே பாரத் வண்டிகளுக்கு இந்த முறையை அறிமுகப்படுத்தி பார்க்கலாம்.


KavikumarRam
ஜூன் 05, 2025 16:05

இ-ஆதார் எல்லாம் ஒரு விஷயமே அல்ல. ஒன்னு, தட்கல்ல டிக்கட் பண்ணுனும்னா ஆன்லைன்லாம் கிடையாது நேரா எல்லாரும் டிக்கெட் கவுண்டருக்கு வந்து தான் புக் பண்ணனும்னு சொல்லுங்க. இல்லேன்னா ஆன்லைன் புக்கிங்க ஒழுங்கு படுத்துங்க. ரெண்டையும் வச்சு ஊரை ஏமாத்தாதீங்க. ஆன்லைனில பதிவு செய்ய கேப்ச்சா எழுத்துக்களை ஒவ்வொரு ஸ்க்ரீன்லயும் ரெண்டுமுறை டைப் செய்து பேமெண்ட் கேட்வேக்கு போறதுக்கு முன்னால படு மொக்கையா ஒரு சிஸ்டம வச்சிருக்கானுங்க. இதுக்குப்பிறகு பேமெண்ட் ஒடிபி வேற. ப்ரோக்கர் லாகின்லே மட்டும் நல்லா கொள்ளையடிக்கிறானுங்க.


KavikumarRam
ஜூன் 05, 2025 14:36

கண்டிப்பாக ஆன்லைன் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் பெரிய ஃபிராடு நடக்கிறது. தட்கல் டிக்கெட் பதிவு கடந்த ஒரு வருடமாக கிட்டத்தட்ட கிடைப்பதே இல்லை. அதே மாதிரி ஆன்லைன் புக்கிங்கில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கேன்சல் செய்யும்போதோ அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் தானாகவே கான்சல் ஆகும்போதோ பிடிப்புத்தொகை இல்லாமல் முழுத்தொகையும் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆர்ஏசி மற்றும் கன்ஃபார்ம் டிக்கெட்டை கான்சல் செய்யும்போது பிடிதத்தொகை பிடித்ததையாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கான்சல் ஆகும் போதும் பிடிப்புத்தொகையை பிடித்தம் செய்வது ரயில்வேயின் கொள்ளையாகும்.


Sivagiri
ஜூன் 05, 2025 13:52

ஈ ஆதார், நம்பர் போட்டு, நெட்-டில், அப்ரோவ் அகி வரத்துக்கே, பல நிமிடங்கள் ஆகும், அதற்குள் சீட் முடிஞ்சி, வைட்டிங் லிஸ்டும் முடிஞ்சி, regret வந்திடும்


chennai sivakumar
ஜூன் 05, 2025 14:45

வெரி ட்ரு சார்


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூன் 05, 2025 12:00

எப்போது நடை முறைக்கு வரும் என்ற தகவல்கள் இந்த செய்தியில் இல்லை?


Ramesh Sargam
ஜூன் 05, 2025 11:02

இந்த இ-ஆதார் எப்படி பெறுவது? தெரிந்தவர்கள் கூறுங்கள். நன்றி.


maan
ஜூன் 05, 2025 13:47

சார், இதெல்லாம் இப்போதும் இருக்கிறது. IRCTC போர்டல் சென்று லாகின் செய்து ஆதார் வெரிபிகேஷன் செய்ய வேண்டும். உங்கள் ஆதாரை பதிவிட்டவுடன் ஒரு OTP வரும். அதை பதிவிட்டால் வெரிபிகேஷன் முடிந்தது. இது இப்போது எதற்கெனில் ஒரு மாதத்தில் எத்தனை டட்கல் டிக்கெட் வேண்டுமானாலும் எடுப்பதற்கு. ஒரு லாகின் IDக்கு ஒரு ஆதார். நிறைய ID ஓபன் செய்ய முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை