உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 ஆண்டுகளில் இல்லாத நிலை: அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை சரிவு

24 ஆண்டுகளில் இல்லாத நிலை: அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. 24 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது.அமெரிக்க விசா நடைமுறைகள், வரி விதிப்பு, வெளி நாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு கெடுபிடிகள் என கடும் நடவடிக்கைகளை அந்நாட்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அவரின் நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகள் கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் அதே சூழலில், அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.இந்த விவரம், அமெரிக்க வர்த்தகத்துறை தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதில் இடம்பெற்று உள்ள விவரங்கள்;2025ல் ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். கடந்தாண்டில் இதே கால கட்டத்தில் (ஜன-ஜூன்) அமெரிக்காவுக்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை என்பது 2.3 லட்சம் பேராகும். அதாவது, 5.5 சதவீதம் குறைந்துள்ளதாகும். இது, 24 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும்.இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. 2025 ஜூனில் 6.2 சதவீதம் சரிவு காணப்படுகிறது. அமெரிக்கா தவிர்த்து, மற்ற மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tamilan
செப் 01, 2025 00:29

மோடியின் தவறான அந்நிய, பொருளாதார கொள்கைகள்தான் காரணம் .


vivek
செப் 01, 2025 07:45

எங்களுக்கு சந்தேகம் தான்


HoneyBee
செப் 02, 2025 20:05

ஆமாம் டமிலன் டமிலன்...எல்லாம் மோடிஜி செயல் தான் .அதனால் தான் அமெரிக்கா எவ்வளவு அழுத்தம் கொடுத்தும் அமெரிக்க விவசாய மரபு மாற்ற பட்ட விதைகளை இங்கு அனுமதி தராததால் மோடிஜி தான் முதல் எதிரி அமெரிக்க நாய்களுக்கு மற்றும் திராவிட டமிலன் அடிமை நாய்களுக்கு. இன்னும் எத்தனை யுகங்கள் அடிமையாக குவார்ட்டர் பிரியாணிக்கு ஆசை பட்டு ஓட்டு போட்டு செத்து மடியும் கூட்டமாக இருப்பீர்கள்.


M Ramachandran
ஆக 31, 2025 23:45

இந்தியர்கள் அறிவுள்ளவர்கள். என்னகு சென்றாலும் அறிவு திறமையால் முன்னேறுவார்கள்.ஆனால் இந்திய நாட்டில் பிரந்து பாகிஸ்தான் போன்ற பிற கைய்ய கூலி நாடுகளின் எச்சத்தை தின்னுட்டு அந்த நாதரிக்கும்பல் எதிர்த்து வேலை செய்யுது பல நாடுங்களில்.


Ramesh Sargam
ஆக 31, 2025 23:41

கடந்த 5 ஆண்டுகளில் அதிக இந்தியர்கள் ஆஸ்திரேலியா வில் குடியேற்ற்றம். அங்குள்ள ஆஸ்திரேலியா மக்கள் இந்த அந்நியர்களின் குடியேற்றத்தை எதிர்த்து அங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியர்கள் அமெரிக்கா செல்வதை நிறுத்தி விட்டு, ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளுக்கு படையெடுக்கிறார்கள். ஏன் இப்படி இந்தியாவை உதறித்தள்ளிவிட்டு வெளிநாடுகள் சென்று சிரமத்துக்கு உட்படவேண்டும்.


Venugopal S
ஆக 31, 2025 23:02

இதற்குக் காரணம் இந்தியர்களுக்கு அமெரிக்கா மீதான மோகம் குறைந்து விட்டது என்று இல்லை. அமெரிக்கா இந்தியர்களுக்கு கொடுக்கும் விசா கட்டுப்பாடுகளை அதிகரித்தது தான் காரணம்!


vivek
செப் 01, 2025 07:46

வீணா போனவனின் கண்டுபிடிப்பு.


முக்கிய வீடியோ