உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை: அதிகரிக்கும் சிறுபான்மையினர்: ஆய்வறிக்கையில் அம்பலம்

இந்தியாவில் குறைந்து வரும் ஹிந்துக்களின் எண்ணிக்கை: அதிகரிக்கும் சிறுபான்மையினர்: ஆய்வறிக்கையில் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளதும், சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும். பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.ஷமிகா ரவி, அபூர்வ் குமார் மிஸ்ரா மற்றும் ஆப்ரஹாம் ஜோஸ் ஆகியோர், 1950 முதல் 2015 வரை மக்கள் தொகை குறித்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகையில், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்து உள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.84 சதவீதமாக இருந்தது. அது, 14.09 சதவீதமாக அதிகரித்தது. இது 43.15 சதவீதம் அதிகம் ஆகும்.கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது(5.38 சதவீதம்)சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.(6.58 சதவீதம்)புத்த மதத்தை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை 0.05 சதவீதத்தில் இருந்து 0.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஆனால், ஜெயின் சமூகத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது. பார்சி சமூகத்தினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது.இந்திய துணைக் கண்டத்தில் முஸ்லிம் நாடுகளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாலத்தீவில் மட்டும், பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.உலகளவில் 123 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 44 நாடுகளில் மட்டுமே அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Dharmavaan
மே 12, 2024 17:52

எல்லாவற்றுக்கும் மூல காரணம் பிரிவினைக்கு பிறகு சிறுபான்மையினரை இங்கு தங்கவிட்டதே இது காந்தி நேரு ஹிந்துக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்


K.Muthuraj
மே 12, 2024 12:36

மோடி ஆட்சி வரவில்லையென்றால் இன்னும் இருபது சதவீதம் குறைந்திருக்கும்


Dharmavaan
மே 12, 2024 05:23

மத ஈதியான சலுகைகள் முழுதும் நிறு த்தப்பட வேண்டும் ஹிந்து கோயில்களிருந்து காசு எளியேற வேண்டும்


Dharmavaan
மே 12, 2024 05:16

மனைவி பிள்ளை குடும்பத்தை எப்படி நடத்துவான் ஏழ்மைக்கு இதுவே காரணம் அவன் குடும்பத்துக்கு ஏற்றாற்போல் அரசு உதவி செய்யவேண்டுமாஹிந்துக்களுக்கு அந்த நீதி கிடையாதா என்ன அக்கிரமம் இது


Aarif Yasmin
மே 10, 2024 17:28

இறைவன் மிகப்பெரியவன்


Mohan
மே 12, 2024 15:29

மிகப் பெரியவனான இறைவன் மனிதர்களின் ""பலி"" ஏனய்யா கேட்பான்?? வாழு, வாழவிடு என்பதை உங்கள் மதமும் நீங்களும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் உங்களையும் உங்கள் கடவுள் கொள்கைகளையும் எவனும் ஒத்துக்கொள்ளமாட்டான் என்பது உங்க மரமண்டைகளில் ஏன் ஏறவில்லை?? ஒரே மதம் இருக்க வாய்ப்பே இல்லை, இந்த விசாலமான உலகில் மற்ற வர்களின் உயிர்ப்பலி கேட்கும் உங்க மதம் பிடித்த தலைவர்கள் உங்கள் எல்லாருடைய உயிரை வாங்கினாலும் திருப்திப்பட மாட்டார்கள் இந்த உலகத்தில் நாம் வந்து இருப்பது உயிர் வாழத்தான் ஐயா


Raa
மே 13, 2024 11:44

ஆம் எல்லா மத இறைவர்களும் மிகப்பெரியவர்கள் தான்


Haneesh
மே 10, 2024 16:39

ஆமா இவர் தான் போயி இந்தியா கேட்டை திறந்து விட்டாரு


Satya Vasantha S R Vaheeswarsn
மே 10, 2024 15:18

கோடிக்கணக்கான பக்கத்து நாட்டவர்கள் இங்கே குடியேறி இந்திய இஸ்லாமியராக அடையாளப்படுத்திக் கொண்டு வாக்காளர் அட்டை ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு விட்டனர்


Haneesh
மே 10, 2024 16:46

நீங்க தானே இந்தியா கேட்டை திறந்து விடீர்கள் ,??


Deivakani M
மே 10, 2024 12:50

ஏற்றத்தாழ்வு இல்லாத படிப்பறிவு உள்ள சமூகம் வளர்ந்தால் மூடப்பழக்கங்கள் உள்ள மதங்கள் அழியும் அதுதான் நடைபெறுகிறது தீண்டாமை உள்ள மதங்கள் முதலில் அழியும்


INDIAN
மே 10, 2024 12:37

இது தேர்தல் நேர விளையாட்டு வழக்கம் போல் ஓட்டுக்கான பொய் கதை நம்பமுடியாது


INDIAN
மே 10, 2024 12:35

Living together என்று மக்கள் நாகரீக வாழ்க்கை என்று வாழ ஆரம்பித்து விட்டார்கள் கெட்ட பழக்கவழக்கங்களால் ஆண்மை குறைபாடு ஏற்பட்டு விட்டதுவிலைவாசி உயரந்து விட்டது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி