உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. பிரதமர் மோடி தலைமையில், 2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதைப் பார்க்க முடிகிறது,'' என பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நேற்று மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை வந்தடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து இன்று அவரை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xrwd30rb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகு பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார மற்றும் நிதி தலைநகரில் பிரதமர் மோடியைச் சந்தித்தது முக்கியமானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும். அதனை நான் இங்கு பார்க்கிறேன். உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
அக் 09, 2025 18:54

இதை அப்படியே எங்களது நாட்டில் இருந்து மொக்கை போடும் இத்தாலி பப்பு என்ற ராகுல் கான் அவர்களிடம் சொல்லுங்கள்.... அவர் தான் அறிந்தும் அறியாதது போல் சீன் போட்டு கொண்டு இருக்கிறார்.


ஆரூர் ரங்
அக் 09, 2025 18:43

செத்த பொருளாதாரம் ன்னு சொன்ன டிரம்ப் நோ பால் பரிசு வருமா ன்னு கனவு கண்டு கொண்டிருக்கிறார். வழிமொழிந்த ராகுல் ஆளையே காணோம்.


Rajah
அக் 09, 2025 18:21

இதைக் கொஞ்சம் உரக்க ஸ்டாலின் காதில் விழும்படி சொல்லுங்கள்.


Vasan
அக் 09, 2025 17:59

அய்யய்யோ, கண்ணு வைச்சிட்டாரே


Mr Krish Tamilnadu
அக் 09, 2025 17:54

சும்மாவா?. வரி ஏய்ப்பு களை தேடி தேடி கண்டுபிடித்து, வரி செலுத்த வைத்தது. முதல் முயற்சியாக பண முதலைகளின் சுவிஸ் வங்கி கருப்பு பணம் கண்டுபிடிப்பு. 500 ரூபாய் பண மதிப்பு இழப்பு. குஜராத் நண்பர்களுக்கு வங்கி கடன் தள்ளுபடி. உலக பணக்காரர்கள் வரிசையில் அவர்களை இடம்பெற்ற செய்து, அவர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் முயற்சி. மாநில தனிப்பட்ட வரவு செலவுகளை தனது ஆளுமையில் எடுத்தது. அதற்கு உதவி புரியும் வகையில் ஆன்லைன் பேமெண்ட். அமெசான் ஆன்லைன் வணிகம். மாநில கட்டுப்பாட்டு வணிகத்தை பரவல் ஆக்கியது. வெளிநாட்டு பயணங்கள் அவர்கள் தேவை, நமது தேவை ஒரு கூட்டு லாப நோக்க திட்டம். ஒரு நாடு, ஒரே ஆளுமை திட்டம். இதை போன்ற பல எண்ணற்ற தெரிந்தும் தெரியாத, மக்கள் விரும்பும் விரும்பாத சாதனை அடையும் நோக்கமுடன் பயணம். அதன் பலன் இது. நன்றாக திட்டமிட்டு செதுக்கியது.


Thravisham
அக் 09, 2025 18:47

200 ரூவாவும் ஓசி பிரியாணி சாப்டு மூளை மழுங்கிடுச்சா? நல்ல மன நல மருத்துவரை கூடிய சீக்கிரம் பாருங்க


Mr Krish Tamilnadu
அக் 09, 2025 19:27

நல்லதை பாராட்ட வேண்டும். எதிரிக்கும் விருந்தோம்பல் செய்பவன் தமிழன். மேலே கூறியதில் வஞ்ச புகழ்ச்சியும் உள்ளது. அனைத்தும் செதுக்குகிறார்கள். ஆதார் மூலம் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள். தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு நிச்சயம் அவர்களிடம் உள்ளது. நாம் வளைந்து கொடுக்க ஆசைப்படுகிறார்கள். அல்லது நம்மை நிர்வாகிப்பவர்கள் வளைந்து கொடுக்க வேண்டும். நாம் தப்பையும் கேட்போம். சரியையும் பாராட்டுவோம். நாம் உண்மையை உரக்க சொல்பவர்கள்.


சமீபத்திய செய்தி