உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்தியாவின் கடல்சார் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மும்பையில் நடந்து வரும் இந்திய கடல்சார் வார விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, இந்தியாவின் துறைமுகங்கள் வளரும் நாடுகளில் மிகவும் திறமையானவையாகக் கருதப்படுகின்றன. பல அம்சங்களில், அவை வளர்ந்த நாடுகளை விட சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தியாவின் கடல்சார் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. நூற்றாண்டுகளுக்கும் மேலான காலனித்துவ கப்பல் சட்டங்களை 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற நவீன மற்றும் எதிர்கால சட்டங்களால் மாற்றியமைத்துள்ளோம்.புதிய சட்டங்கள் மாநில கடல்சார் வாரியங்களின் பங்கை வலுப்படுத்துகின்றன. துறைமுக நிர்வாகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கின்றன. இந்திய கடல்சார் வார விழா ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளது. 2016ல், இந்த மாநாடு தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்க இன்று 85 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்துள்ளனர். பல கப்பல் கட்டும் திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. இது இந்திய கடல்சார் துறையின் வள்ர்ச்சி மற்றும் திறமையை பிரதிபலிக்கிறது. கடல்சார் துறை இந்தியாவின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இது கணிசமாக மாறியுள்ளது. வர்த்தகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கப்பல் கட்டுமானத்தில் புதிய உயரங்களை எட்டுவதற்கான முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venugopal S
அக் 30, 2025 07:37

உலக அளவில் துறைமுகம், கப்பல் கட்டுமானத் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம் கூட இல்லை.சீனா, தென்கொரியா, ஜப்பான் மட்டுமே தொண்ணூற்றிமூன்று சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளன.வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டு இருப்பதை விட்டு விட்டு உருப்படியாக நாட்டுக்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்!


ஜெய்ஹிந்த்புரம்
அக் 29, 2025 19:56

அந்தமான் தீவு ஒன்றில் பல்லுயிர்களை அழித்து அங்கு ஒரு துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. அந்த தீவு அதானிக்கு தாரை வார்க்கப்படும். அது அதானிமான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.


vivek
அக் 30, 2025 05:52

888 கோடி கொடுத்தால் தமிழக அரசு உனக்கும் தரும் பொய்ஹிந்து


தெய்வேந்திரன்,சத்திரக்குடி இராமநாதபுரம்
அக் 30, 2025 07:18

உனக்கேன் வயிறு எரிகிறது நீ பேசாமல் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் சுபிட்சமாக இரு...இங்கிருந்து கொண்டு வன்ம கருத்துகளை பதிவிடாதே!


RAMESH KUMAR R V
அக் 29, 2025 19:22

வளர்க பாரதம்.


புதிய வீடியோ