உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானை அம்பலப்படுத்த மத்திய அரசின் குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!

பாகிஸ்தானை அம்பலப்படுத்த மத்திய அரசின் குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாக்., பயங்கரவாத ஆதரவை உலக அரங்கில் பகிரங்கப்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள ஏழு குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தற்போது ஏழு குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. 59 தலைவர்கள் 32 நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள்.

குழு 1

பா.ஜ., எம்.பி., பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:*சவுதி அரேபியா* குவைத்* பஹ்ரைன்*அல்ஜீரியா

குழு 2

பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:* இங்கிலாந்து* பிரான்ஸ்* ஐரோப்பா* ஜெர்மனி* டென்மார்க்

குழு-3

ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:* இந்தோனேசியா*மலேசியா* கொரிய குடியரசு*ஜப்பான்* சிங்கப்பூர்

குழு-4

சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:* ஐக்கிய அரபு எமிரேட்ஸ்*லைபீரியா*காங்கோ ஜனநாயக குடியரசு* சியரா லியோன்

குழு-5

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:* அமெரிக்கா,* பனாமா,* கயானா,* பிரேசில்,* கொலம்பியா

குழு-6

தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:* ஸ்பெயின்* கிரீஸ்* ஸ்லோவேனியா* லாட்வியா* ரஷ்யா

குழு-7

தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:* எகிப்து* கத்தார்* எத்தியோப்பியா*தென் ஆப்ரிக்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
மே 18, 2025 22:09

தாய்லாந்து செல்லும் குழுவில் தன்னை சேர்க்காத ஆத்திரம் ஒருவருக்கு.


Rathna
மே 18, 2025 21:07

நேரடியாக மற்ற நாட்டு அமைச்சர்களை, MP க்களை சந்திக்கும்போது தீவிரவாத செயல்களுக்கான ஆதாரத்தை தரலாம். அவர்கள் கருத்தை மாற்ற, மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகளாவிய தீவிரவாத செயல்களுக்கான கொள்கைகளை உருவாக்க முடியும்.


Tetra
மே 18, 2025 18:20

மக்கள் பணம் வீண். இவர்கள் போனால் எல்லோரும் சிரிப்பார்கள். குறைந்தது ₹10 கோடி செலவு.


spr
மே 18, 2025 17:29

இது வீண் செலவுதான் ஆனால் வழக்கம் போல மோடியின் சாமர்த்தியம். "ஒரே கல்லில் இரு மாங்காய்" என்னதான் இணைய தளம் மற்றும் கைபேசி மூலம் பேசினாலும் மனிதர்களை நேரில் சந்தித்துப் பேசுவதே இன்னமும் மனித மனம் விரும்புமோரு நிகழ்வு அதனால்தான் தேர்தல் கூட்டங்கள் இன்னமும் களை காட்டுகிறது காசு செலவழிக்கப்படுகிறது. தெருவெங்கும் சுவரொட்டி ஒட்டினாலும் அதனைப் பார்ப்பவர் படிப்பவர் குறைவு "கண் வழி காண்பதுவும் கவனம் பெறாது ஆயின் செவி வழி செல்வது சிந்தையில் நிற்கும்" அதே நேரத்தில் இவர்கள் உலகறிய இந்திய கட்சிகள் அரசுடன் இவ்விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள் எனக் காட்டுவது. முதல்வர் ஸ்டாலின் அதில் முன்னால் நின்றவர் பாராட்ட வேண்டும் எல்லாம் அரசியலே இவர்கள் எவரும் இனிப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமெனக் கூவ மாட்டார்கள் கட்சியில் ஷாருக் கூடுதலாக சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுவர் சசி தரூர், அசாதுதீன் ஓவைசி மற்றும் கனிமொழிக்கு அது பொருந்தும் பாவர் போன்றவர்களுக்கு இது ஒருவகை சுற்றுப்பயணம் இவர்கள் செல்லும் விமானம் பாதுகாப்பாகச் செல்ல பயண நேரம் காலம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்


chinnamanibalan
மே 18, 2025 16:56

ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கும் அரசு, தனது நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் மீதான தனது எதிர்வினை இவற்றை உலக நாடுகளின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்வது வரவேற்க தக்கது.


Sankar Ramu
மே 18, 2025 15:50

தொடர்ந்து பாக்கிஸ்தானின் தீவிரவாத கொள்கைகளை உலகநாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.


Gokul Krishnan
மே 18, 2025 15:19

இது தேவையற்ற வீண் செலவு இன்றைக்கு இருக்கும் ஆன்லைன் யுகத்தில் எல்லா நாடுகளும் இன்டர்நெட் மூலம் தங்கள் நாட்டின் உளவு அமைப்பு மூலம் அனைத்து விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் அப்படியே இவர்கள் போய் விளக்கி சொன்னாலும் ஏற்கனவே தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை என்னவோ அதை தான் அவர்கள் பின் பற்ற போகிறார்கள் இஸ்ரேலோ அமெரிக்காவோ சீனாவோ இது போன்று விளக்கி சொல்வது இல்லை


VIJAY N
மே 18, 2025 17:57

லூசுத்தனமான கருத்துக்களை சொல்வதில் மன்னர் நீங்கள்


Sudha
மே 18, 2025 19:36

இது தவறான கருத்து. இது ஒரு புதிய முயற்சி. மேலும் அந்த நாடுகளுக்கு மறைமுக ஆதரவும் பாக் பக்கம் திரும்பும் பட்சத்தில் மறைமுக கண்டிப்பும் தரலாம். அமெரிக்கா சீனாவுக்கு தெரியாமல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை