உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்திய இந்திய நிறுவனங்கள்

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்திய இந்திய நிறுவனங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய வினியோகஸ்தராக ரஷ்யா திகழந்து வந்தது. இதற்கடுத்த இடங்களில் ஈராக் மற்றும் சவுதி அரேபியா இருந்தன. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு பின், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவானது.இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியானது, இந்தியாவின் மொத்த எண்ணெய் கொள்முதல் சதவீதம் அதிகரித்து கொண்டே சென்றது. மற்ற எண்ணெய் வினியோகஸ்தர்களுடன் ஒப்பிடுகையில், விலை உச்ச வரம்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெயை தவிர்ப்பது உள்ளிட்ட காரணங்களுடன், ரஷ்ய எண்ணெய் தள்ளுபடியில் வழங்கப்பட்டதும் இதற்கு முதன்மையான காரணமாகும்.தற்போது, விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. ரஷ்யா விலைச்சலுகையை நிறுத்திவிட்டதால், அங்கிருந்து கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய்க்கும், வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளில் பெறப்படும் கச்சா எண்ணெய்க்கும் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. இது குறித்து வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியன் ஆயில் கார்ப், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பாரத் பெட்ரோலியம் கார்ப் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு பெட்ரோ கெமிக்கல் லிமிமெட் ஆகியவை கடந்த ஒரு வாரமாக ரஷ்ய எண்ணெய்களை வாங்கவில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 35 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்தே வாங்கப்படுகிறது.தங்கள் நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குபவர்களுக்கு ரஷ்யா விலைச்சலுகை வழங்குவது வழக்கம். இந்த விலைச்சலுகையானது, தற்போது மிகக்குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதுவே ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் அளவு குறைவுக்கு காரணம். இவ்வாறு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Shiva Shiva
ஆக 01, 2025 20:24

வடகொரியா கெத்து


guna
ஆக 01, 2025 18:19

பார்த்து மாதேஷ்...நல்லா முத்தி வெடிச்சிட போகுது....உன் மண்டைய சொன்னேன்....பத்திரம்


Karthik Madeshwaran
ஆக 01, 2025 16:15

அதுவும் ஒரு வாரமாக நிறுத்தமா ?? டிரம்ப் கண்டனம் தெரிவித்த பிறகு, மிரட்டிய பிறகு தான் விலைச்சலுகை இல்லை என்று தெரிந்ததோ ? என்னடா கலர் காலரா ரீல் சுத்துறீங்க ? இந்த கதை எல்லாம் தற்குறி பாஜக அடிமைகள் வேண்டுமானால் நம்பலாம். புத்தியுள்ளவன் கண்டிப்பாக நம்ப மாட்டான். அமெரிக்காவின் மிரட்டலுக்கு குப்புற படுத்து படுத்தே விட்டது ஒன்றிய பாஜக அரசு. கேவலம்.


Nagendran,Erode
ஆக 01, 2025 18:00

மூர்க்கனே நீதான் போலி பெயரில் ஒளிந்து கொண்டு கலர் கலரா ரீல் விடுற...


Karthik Madeshwaran
ஆக 01, 2025 16:06

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டாம் என்று பாஜக ஒன்றிய அரசு எண்ணெய் நிறுவனங்களை கட்டளையிட்டுள்ளது. ஒப்பந்தம் செய்கிறோம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சி உள்ளார்கள். கார்ப்பரேட் ஊழல் பாஜக அரசிற்கு தெம்பு திராணி இல்லை. மிரட்டலுக்கு பயந்து குப்புற படுத்து இந்தியர்களை அசிங்க படுத்துகிறார்கள். வெட்கக்கேடு. அதனாலே டிரம்ப் நாட்களை தள்ளி வைத்துள்ளார்கள்.. கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்.


Nada raja
ஆக 01, 2025 15:55

ரஷ்யா ரொம்ப ஓவரா தான் போகிறது


Neelachandran
ஆக 01, 2025 15:42

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து விலைச் சலுகை இல்லை என்பது முக்காடு. சவுதியின் விலை ரஷ்யாவின் விலை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா


ஆரூர் ரங்
ஆக 01, 2025 15:35

போர் செலவினங்கள் அதிகரிப்பால் விலை சலுகை அளிக்க முடியவில்லை.


Tamilan
ஆக 01, 2025 15:14

மோடியின் கார்போரேட்டு சித்துவிளையாட்டு ரஸ்யாவிடமும் அமெரிக்காவிடமும் எடுபடவில்லை


vivek
ஆக 01, 2025 18:21

அப்போ நாளை முதல் பெட்ரோலுக்கு பதில் பினாயில் குடிச்சிகோ tamilan


சமீபத்திய செய்தி