உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான 'இண்டிகோ'வுக்கு வருமான வரித்துறை ரூ.944 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கான நோட்டீசை, இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் விமான நிறுவனம் பெற்றுள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2021- 2022ம் ஆண்டு வருமான வரி பிரச்னை தொடர்பான, வருமான வரித்துறை கமிஷனரிடம் செய்யப்பட்ட முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த முறையீடு இன்னும் விசாரணையில் உள்ளது. உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து சட்ட ரீதியில் போராடுவோம் .மேலும், இதனால், நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், 25ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தங்களின் நிகர லாபம் 18.6 சதவீதம் குறைந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியிருந்தது. செலவுகள் உயர்வு காரணமாக லாபம் குறைந்ததற்கான காரணம் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
மார் 30, 2025 23:36

எந்த நடவடிக்கையின் அடிப்படையில் அபராதம் ????


अप्पावी
மார் 30, 2025 20:30

வருமான வரித்துறை தானே... கணக்கே சரியா வராது அவிங்களுக்கு. அவிங்களை எதிர்த்தால் நியாயமும் கிடைக்காது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 30, 2025 21:33

எல்லாம் தெரிந்தது போல் சில ஏகாம்பரங்கள் அரைகுறை அறிவை வைத்து கருத்து போடுகிறவர்கள் அதிகமாகி விட்டார்கள்....கருத்தை தமிழில் பதிவிடுவார் ஆனால் பெயரை இந்தியில் போடுவார் இந்த அசமஞ்சன்.....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை