உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டிகோ விமான சேவை ரத்து விவகாரத்துக்கு தீர்வு; நிலைமை விரைவில் சீராகும் என மத்திய அரசு அறிவிப்பு

இண்டிகோ விமான சேவை ரத்து விவகாரத்துக்கு தீர்வு; நிலைமை விரைவில் சீராகும் என மத்திய அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 3ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என தெரிவித்துள்ளது.ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, 'இண்டிகோ' நிறுவனம் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான விமானங்களை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.3வது நாளாக இன்றும் (டிச.,05) நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இன்று 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. டில்லியில் 225 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், பெங்களூருவில் 102 விமானங்கள், ஐதராபாத்தில் 92 விமானங்கள், ஜெய்ப்பூரில் 34 விமானங்கள், புனேவில் 32 விமானங்கள், சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, விமான சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விசித்திரமான வரவேற்பு நிகழ்ச்சி

புவனேஸ்வர்-ஹுப்ளி இண்டிகோ விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்த தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, வர முடியாமல் 1,400 கிலோமீட்டர் தொலைவில், புதுமண தம்பதிகள் சிக்கி கொண்டனர். வேறு வழியில்லாத நிலையில் புதுமண தம்பதி, ஆன்லைன் மூலம் தங்களது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மண்டபம் வந்த உறவினர்கள் வீடியோ அழைப்பு வாயிலாக, தம்பதியை பார்த்து வாழ்த்தி சென்றனர்.

பங்கு விலை வீழ்ச்சி

இண்டிகோ நிறுவனத்தின் பங்கு 2 நாட்களில் 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கு விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய விதிகள் வாபஸ்

இந்நிலையில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரகம் அறிவித்துள்ளது. விமான நிறுவனங்களின் சேவைகளுக்கான புதிய விதிகளை டிஜிசிஏ வாபஸ் பெற்றது. இதனால் விமான சேவைகள் ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ