உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.டில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு இன்று (ஜூன் 19) காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விமானம் புறப்பட்டுச் சென்றது. லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் டில்லிக்கு மீண்டும் திருப்பி விடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9bg18shc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு பிறகு கடந்த 7 நாள்களில், அதிக விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்செய்யப்படுவது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Maheswaran
ஜூன் 21, 2025 08:28

லே விமான நிலையத்தில் கோளாறை சரி செய்ய வசதிகள் இல்லை. ஆனால் தரை இயக்குவதில் பிரச்சினை இல்லாத கோளாறாக இருக்கும்.


sankaranarayanan
ஜூன் 19, 2025 18:37

அது எப்படி லேயில் இறங்க முடியாத விமானம் திரும்ப வந்து டில்லியில் இறங்கிற்று இதற்கு முழு விளக்கம் கிடைக்குமா இரண்டுமே விமானங்கள் இறங்கும் இடம்தான்


muthurajrsk@yahoo.in
ஜூன் 19, 2025 15:16

நம்ம தலைவர் உலகம் முழுக்க போறாரு ஏன் ஏதும் ஆக மாட்டாது


N Sasikumar Yadhav
ஜூன் 19, 2025 16:24

உங்க மானங்கெட்ட கிரிமினல் மூளை பயங்கரவாதத்தனமாக யோசிக்கிறது வாழ்க உங்க கிரிமினல் மூளை


SUBRAMANIAN P
ஜூன் 19, 2025 16:59

குடும்பத்தோட போறாரு..


தென்காசி ராஜா ராஜா
ஜூன் 19, 2025 13:23

அனைவருக்கும் ஒரு உண்மையை தெறிந்து கொள்ளுங்கள் இவ்வளவு நாளும் சிறு சிறு கோளறு இருந்தாலும் அப்படி இப்படின்னு ஆட்டி கிழே இறக்கி விட்டுட்டாங்க ஆனா இப்போது பெறிய விபத்துக்கு பிறகு உசரா இருக்காங்க


SUBRAMANIAN P
ஜூன் 19, 2025 13:20

என்ன சொல்றீங்க.. அதே தொழில்நுட்ப கோளாறு தானே டெல்லில தரை இறங்கும்போதும் இருக்கும். டெல்லில மட்டும் எப்படி தரை இறங்குச்சு. நம்பும்படியா இல்லையே ? எதோ நடக்குது..